தேரா சச்சா சௌதா தலைவர் குர்மீத் ராம் ரஹிம் சிங்கிற்கு எதிரான வழக்கில் இன்று தீர்ப்பு வழங்க உள்ளதையடுத்து பஞ்சாப், ஹரியானா மாநிலங்களில் பதற்றம் நிலவி வருகிறது.
15 ஆயிரம் துணை ராணுவப்படை உட்பட பல்லாயிரக்கணக்கான வீரர்கள் பாதுகாப்புப்பணியில் குவிக்கப்பட்டுள்ளனர். தொலைபேசி வழி இணைய சேவை 72 மணிநேரத்திற்கு தடை செய்யப்பட்டுள்ளது. இரண்டு பெண் சீடர்களை, பாலியல் ரீதியில் துன்புறுத்தியதாக எழுந்த புகாரையடுத்து குர்மீத் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்தது. இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்படுவதையடுத்து பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. பஞ்சாப், ஹரியானா செல்லும் 29 ரயில்களின் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. இதற்கிடையே சட்டத்தை மதித்து இன்று நீதிமன்றத்தில் ஆஜராக உள்ளதாகவும் அனைவரும் அமைதி காக்க வேண்டும் என்றும் குர்மீத் ராம் ரஹிம் சிங் தெரிவித்துள்ளார்.