குஜராத் மாநிலத்தில் பணிரெண்டாம் வகுப்பு மாணவன், தனது வேதியியல் தேர்வில் செக்ஸ் வரைபடங்களை வரைந்து செக்ஸ் சம்பந்தமான கருத்துக்களை எழுதியதால் அம்மாணவன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் அம்மாணவன் தேர்வு எழுதுவதற்கு ஓராண்டு தடை விதிக்கப்பட்டுள்ளது.
குஜராத் மாநிலம், ஆனந்த் மாவட்டத்தில் உள்ள போர்சாத் என்ற பகுதியைச் சேர்ந்த பணிரெண்டாம் வகுப்பு மாணவன், வேதியியல் தேர்வில் செக்ஸ் வரைபடங்களோடு, தன்னுடைய செக்ஸ் உணர்வுகளை வெளிப்படுத்தும் கருத்துக்களை கட்டுரைகளாக எழுதியுள்ளார். அந்த விடைத்தாளை திருத்திய பெண் ஆசிரியர், மாணவனின் விடைத்தாளைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். உடனே, இந்த விடைத்தாளை பள்ளி நிர்வாகத்திடம் எடுத்துச் சென்றார். பள்ளி நிர்வாகம், குஜராத் மாநில உயர்நிலை மற்றும் மேல்நிலைக் கல்வி ஆணையத்திற்கு அனுப்பியது. உடனே கல்வி ஆணையம், மாணவனை விசாரணைக்கு அழைத்தது. மூன்று முறை அம்மாணவன் வராததால் பெற்றோருக்கு தகவல் கொடுக்கப்பட்டு மாணவனை அழைத்து வந்தனர். அப்போது, மாணவன் எழுதிய விடைத்தாள் பெற்றோரிடம் காட்டப்பட்டது.
அந்த விடைத்தாளில், மாணவன் தனது அண்ணி, நடிகைகள், சமையல் வேலைக்கு வரும் பெண் ஆகியோரைப் பார்க்கும்போது தனக்கு ஏற்பட்ட செக்ஸ் உணர்வுகளைப் பற்றி எழுதியிருந்தார். இதைப் பார்த்து மாணவனின் பெற்றோர் அதிர்ச்சியடைந்தனர். தனது வேறு தேவைகளுக்காக பணம் பெற்று மொபைல் வாங்கி, அந்த மொபைலில் தொடர்ந்து செக்ஸ் படங்களை அம்மாணவன் பார்த்து வந்ததும் தெரிய வந்தது. மாணவனின் இந்த செயலால் பெற்றோர்கள் மிகவும் மனம் வருந்தினர். அம்மாணவன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு, ஓராண்டுக்கு தேர்வெழுத அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.