பாஜக எம்பியின் சர்ச்சை பேச்சு.. வேட்பாளரை மாற்றக்கோரி ராஜபுத்திர மக்கள் பேரணி.. ஸ்தம்பித்த குஜராத்!

சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருந்த பாஜக எம்பிக்கு எதிர்ப்பு தெரிவித்து குஜராத்தில் ராஜபுத்திர சமூகத்தினர் பிரமாண்ட பேரணி நடத்தினர்
பர்சோத்தம் ரூபாலா
பர்சோத்தம் ரூபாலாட்விட்டர்
Published on

நாடு முழுவதும் நடைபெற இருக்கும் 7 கட்ட தேர்தல் திருவிழாவில், முதற்கட்ட வாக்குப்பதிவு ஏப்ரல் 19ஆம் தேதி தமிழகம் உள்ளிட்ட சில மாநிலங்களில் தொடங்க இருக்கிறது. அதேநேரத்தில், இதர கட்டங்களுக்கான தேர்தல் வேலைகளும் பிற தொகுதிகளில் சூடுபிடித்து வருகின்றன. இந்த நிலையில், மக்களவைத் தேர்தலில் வட மாநிலங்களில் ஆளும் பாஜகவுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

குஜராத்தில் கடந்த 2022ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் மொத்தமுள்ள 182 தொகுதிகளில் 156 தொகுதிகளைக் கைப்பற்றி பாஜக 7வது முறையாக ஆட்சியைப் பிடித்தது. அம்மாநில முதல்வராக பூபேந்திரபாய் படேல் உள்ளார். இந்த நிலையில், அம்மாநிலத்தில் நாடாளுமன்றத் தேர்தல் பணிகள் வேகம்பிடித்து வருகின்றன. குஜராத்தில் மொத்தமுள்ள 26 மக்களவைத் தொகுதிகளுக்கும் ஒரேகட்டமாக மே 7ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இந்த நிலையில், குஜராத்தின் மக்களவைத் தொகுதிகளில் ஒன்றான ராஜ்கோட்டில் பாஜக சார்பில் மத்திய அமைச்சர் பர்சோத்தம் ரூபாலா களமிறக்கப்பட்டுள்ளார்.

இதையும் படிக்க: The real kerala story| சவூதியில் மரணதண்டனை விதிக்கப்பட்ட இந்தியரை மீட்க 34 கோடி நிதி திரட்டிய மக்கள்

பர்சோத்தம் ரூபாலா
குஜராத் | தேர்தல் பத்திரம் மூலம் விவசாயியிடம் ரூ.10 கோடி மோசடி!

இந்த தொகுதியில் தீவிர பிரசாரம் மேற்கொண்டுவரும் ரூபாலா, கடந்த மார்ச் 22ஆம் தேதி, ”ராஜபுத்திர ஆட்சியாளர்கள் ஆங்கிலேயர்களுடன் இணைந்து செயல்பட்டார்கள். தவிர, தங்களது வீட்டுப் பெண்களை ஆங்கிலேய ஆட்சியாளர்களுக்கு திருமணம் செய்துகொடுத்தனர். ஆனால் எங்கள் ருக்கி சமாஜ் (பட்டியல் இன சமூகம்) மதம் மாறவில்லை. எங்கள் சமூகம் அத்தகைய உறவுகளை ஏற்படுத்தவில்லை” எனச் சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருந்தார்.

இதற்கு ராஜபுத் சமுதாயத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்ததுடன், தொடர்ந்து போராட்டத்திலும் ஈடுபட்டு வருகின்றனர். சர்ச்சைக்குரிய வகையில் பேசியதற்காக ரூபாலா பலமுறை மன்னிப்பு கேட்டுக் கொண்டார். ஆனாலும், ரூபாலாவை நீக்கும்வரை போராட்டம் தொடரும் என்று ராஜபுத்திரர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். முன்னதாக, நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள இச்சமூகத்தைச் சேர்ந்த தலைவர்கள் கலந்துகொண்டு ஆலோசனை நடத்தினர்.

இதையும் படிக்க: இஸ்ரேல்-ஈரான் மோதல்| உலகப்போருக்கு வாய்ப்பு.. டொனால்டு ட்ரம்ப் எச்சரிக்கை!

பர்சோத்தம் ரூபாலா
குஜராத்: காங்கிரஸைத் தொடர்ந்து அடுத்தடுத்து விலகும் பாஜக வேட்பாளர்கள்.. காரணம் என்ன?

அதன்படி, நேற்று (ஏப்ரல் 14) ராஜ்கோட்டில் பாஜகவுக்கு எதிராக ராஜபுத்திரர்கள் மாபெரும் பேரணி நடத்தினர். இதில், ‘நாடு முழுக்க எந்த மாநிலத்திலும் ராஜபுத்திரர்கள் பாஜகவிற்கு வாக்களிக்கக் கூடாது’ என தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாகக் கூறப்படுகிறது. ராஜ்கோட்டில் பாஜகவுக்கு எதிராக ராஜ்புத் சமூகத்தினர் நடத்திய இரண்டாவது பேரணி இதுவாகும். இந்தப் பேரணியில் இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்ட ராஜபுத்திர சமூகத்தினர் கலந்துகொண்டனர். இது, பாஜகவுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது.

பாஜகவைப் பொறுத்தவரை, ரூபாலாவை திரும்பப் பெறுவது என்பது செல்வாக்குமிக்க பாடிதர் சமூகத்தை அசிங்கப்படுத்துவதாகும். அந்த வகையில் பார்க்கப்போனால், பாடிதர் சமூகத்தைவிட ராஜபுத்திர சமூகத்தினரின் வாக்குச் சதவிகிதம் என்பது குறைவுதான். ஆக, இந்த தொகுதியில் எந்தவித மாற்றமும் நிகழ்ந்துவிடாது என்று கூறப்பட்டாலும், ரூபாலாவின் சர்ச்சைப் பேச்சு ராஜபுத்திர வம்சத்தினரை இந்த விஷயத்தில் ஒன்றுசேர்த்துள்ளது. இதனால், நாடு முழுவதும் இருக்கும் ராஜபுத்திர வம்சத்தினர், பாஜகவுக்கு எதிராகத் திரும்பியிருப்பதால், அவர்கள் அதிகம் வசிக்கும் தொகுதிகளில் அக்கட்சிக்கு பின்னடைவு ஏற்பட வாய்ப்பிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதையும் படிக்க: கல்லறையில் உடல்கள் தோண்டியெடுப்பு.. மனித எலும்பில் உருவாகும் போதைப் பொருள்.. அடிமையாகும் இளைஞர்கள்!

பர்சோத்தம் ரூபாலா
குஜராத்: ராஜினாமா கடிதம் அனுப்பிய பாஜக எம்.எல்.ஏ.. பேட்டியில் சொன்ன வித்தியாசமான காரணம்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com