கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த குஜராத் உயர்நீதிமன்ற நீதிபதி மாரடைப்பால் மரணம்

கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த குஜராத் உயர்நீதிமன்ற நீதிபதி மாரடைப்பால் மரணம்
கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த குஜராத் உயர்நீதிமன்ற நீதிபதி மாரடைப்பால் மரணம்
Published on

கொரோனா பாதிப்பு காரணமாக சிகிச்சைப் பெற்று வந்த குஜராத் மாநில உயர்நீதிமன்ற நீதிபதி மாரடைப்பால் மரணமடைந்தார்.

குஜராத் மாநில உயர்நீதிமன்ற நீதிபதியாக இருந்தவர் ஜி ஆர் உத்வானி (59). இவர் கொரோனா பாதிப்பு காரணமாக நவம்பர் 19 ஆம் தேதி அகமதாபாதில் இருக்கும் எஸ்ஏஎல் மருத்துவமனையில் சிசிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். கொரோனாவில் இருந்து மெல்ல மீண்டு வந்தவர் இன்று மாரடைப்பு காரணமாக உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து மருத்துவர் திவ்யங் தல்வாதி கூறும்போது "கொரோனா தொற்றுடன் நீதிபதி அனுமதிக்கப்பட்டார். நவம்பர் 22 ஆம் தேதி அதிகரித்த நுரையீரல் தொற்று காரணமாக மிகவும் இக்கட்டான நிலைக்கு சொன்றார். அவருக்கு ஏற்கெனவே தைராய்டு பிரச்னையும் இருந்தது. இந்நிலையில் இன்று காலை 7 மணிக்கு அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. சரியாக 7.40 மணிக்கு அவரின் உயிர் பிரிந்தது" என்றார்.

நீதிபதி உத்வானி சட்டத்துறைக்கு 1987 இல் நுழைந்தார். 1997 இல் உரிமையியல் நீதிபதியாக பணியாற்றினார். பின்பு குஜராத் மாநில உயர்நீதிமன்ற பதிவாளராக 2 முறையும் அவர் பதவி வகித்துள்ளார். பின்பு 2011 இல் குஜராத் மாநில நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதியாக பணியாற்றியதும் குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com