கிறித்தவர்கள் மதச்சார்பின்மையை முன்னிறுத்தும் கட்சிக்கு வாக்களிக்க வேண்டும் என்று கூறிய குஜராத் பாதிரியாருக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
குஜராத் மாநிலம் காந்திநகர் கிறித்தவ பிஷப், பாதிரியார் தாமஸ் மெக்வான் கிறித்தவர்களுக்கு எழுதிய கடிதத்தில், குஜராத் தேர்தலில் மதச்சார்பின்மையை முன்னிறுத்தும் கட்சிகளுக்கு வாக்களியுங்கள். தேசியவாத சக்திகள் நாட்டை கைப்பற்றுவதில் முனைப்புடன் உள்ளன. குஜராத் தேர்தல் முடிவு ஒரு பெரிய மாற்றத்தை ஏற்படுத்தலாம்.
ஏழைகள், சிறுபான்மையினர், பிற்படுத்தப்பட்ட பிரிவைச் சேர்ந்தவர்கள் என பெரும்பாலான மக்களின் பாதுகாப்பு இங்கே கேள்விக்குறியாகி உள்ளது. எந்தவொரு அரசியல் கட்சியும், நமது தேவாலயங்கள், பாதிரியார்கள் மற்றும் நமது கல்வி நிலையங்களின் மீது தாக்குதல் நடந்தபோது வெளிப்படையாக பேசவில்லை. நமது நாட்டின் மதச்சார்பின்மை மற்றும் ஜனநாயகத்தின் தலைக்கு மேல் கத்தி தொங்கிக் கொண்டிருக்கிறது. நமது அரசியலமைப்புச் சட்டம் தொடர்ந்து காலில் மிதிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. நமது தேவாலயங்கள் மற்றும் கிறித்தவ மக்கள் மீது ஒரு நாள் கூட தாக்குதல் நடத்தப்படாமல் இல்லை. தேர்தலே நமது நாட்டின் எதிர்காலத்திற்கு முக்கியமான ஒன்று என்று எழுதியுள்ளார்.
பாதிரியார் தாமஸ் எழுதிய இந்த கடித்தத்திற்கு விளக்கம் கேட்டு தேர்தல் அவருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.