குஜராத்: 150 பள்ளிகளில் ஒரு மாணவர்கூட தேர்ச்சி பெறவில்லை! அதிரவைத்த தேர்வு முடிவுகள்

குஜராத்தி பாடத்தில் 96,000 மாணவர்கள் தேர்ச்சி பெறவில்லை. இதேபோல் கணித பாடத்தில் 1,96,000 மாணவர்கள் தேர்ச்சி பெறவில்லை.

குஜராத்தில் வெளியான 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகளில் ஒட்டு மொத்தமாக 64.62 விழுக்காடு மாணவர்கள் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர். அதிகபட்சமாக சூரத் மாவட்டத்தில் 76 விழுக்காடு மாணவர்களும் குறைந்தபட்சமாக டாகோட் மாவட்டத்தில் 40 விழுக்காடு மாணவர்களும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

students
studentsFile image

வழக்கம் போல் மாணவர்களை விட மாணவிகளே அங்கு அதிகமாக தேர்ச்சியடைந்துள்ளனர். அதன்படி 70.62 விழுக்காடு மாணவிகளும், 59.58 விழுக்காடு மாணவர்களும் தேர்ச்சி பெற்றுள்ளனர். குஜராத்தி பாடத்தில் 96,000 மாணவர்கள் தேர்ச்சி பெறவில்லை. இதேபோல் கணித பாடத்தில் 1,96,000 மாணவர்கள் தேர்ச்சி பெறவில்லை.

1,084 பள்ளிகளில் 30 விழுக்காட்டுக்கு குறைவான மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். குறிப்பாக 157 பள்ளிகளில் ஒரு மாணவர்கூட தேர்ச்சி பெறவில்லை. மறுதேர்வு எழுதிய 1,65,690 மாணவர்களில் 27,446 மாணவர்கள் மட்டுமே தேர்ச்சி அடைந்துள்ளனர்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com