குஜராத் சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் பாஜகவின் தார்மீக தோல்வியை காட்டுகிறது என்று மம்தா பானர்ஜி கூறியுள்ளார்.
குஜராத் சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் பாஜக முன்னிலை பெற்று வருகிறது. இந்த தேர்தலில் இதுவரை அறிவிக்கப்பட்ட முடிவுகளில் பாஜக 85 இடங்களிலும், காங்கிரஸ் 70 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளது. இந்நிலையில் குஜராத் தேர்தல் குறித்த மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி தனது ட்விட்டர் பதிவில், “குஜராத் தேர்தலில் சமநிலையாக வாக்களித்த வாக்காளர்களுக்கு இத்தருணத்தில் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். பாஜகவுக்கு இது ஒரு தற்காலிகமான வெற்றி. இது பாஜகவின் தார்மீக தோல்வியை காட்டுகிறது. குஜராத்தில் பாஜகவுக்கு எதிராக பதிவான வாக்குகள் அநீதிகளுக்கும், அட்டுழியங்களுக்கும் எதிராக பொதுமக்கள் அளித்த வாக்குகள். 2019 தேர்தலில் பாஜக எனும் பூனைக்கு மணிக்கட்டுவதற்கான அறிகுறி குஜராத் தேர்தலில் தெரிகிறது” என அவர் பதிவிட்டுள்ளார்.