பண்டிகை காலமும் கொரோனா அச்சுறுத்தலும்... பாதுகாப்பான கொண்டாட்டத்திற்கு சில டிப்ஸ்..!

பண்டிகை காலமும் கொரோனா அச்சுறுத்தலும்... பாதுகாப்பான கொண்டாட்டத்திற்கு சில டிப்ஸ்..!
பண்டிகை காலமும் கொரோனா அச்சுறுத்தலும்... பாதுகாப்பான கொண்டாட்டத்திற்கு சில டிப்ஸ்..!
Published on

உலகம் முழுவதும் விடுமுறை நாட்களும், விழாக்காலங்களும் தொடங்கிவிட்டது. அமெரிக்காவில் நன்றி செலுத்துதல் விழாவிற்கு தயாராகிக் கொண்டிருக்கிறது. அதேபோல் இந்தியாவின் மிகப்பெரிய கொண்டாட்டமான தீபாவளியும் நெருங்கிக் கொண்டிருக்கிறது. அதைத் தொடர்ந்து உலகமே கிறிஸ்துமஸ் மற்றும் புதுவருடத்தை வரவேற்க தயாராகிவருகிறது. ஆனால் எந்த ஆண்டும் இல்லாத அளவுக்கு இந்த ஆண்டின் கொண்டாட்டங்களில் பல மாற்றங்கள் இருக்கத்தான் போகிறது.

காரணம், கொரோனா நோய்த்தொற்றால் உலக நடைமுறையே மாறியிருக்கிறது. அனைத்து நாடுகளுமே கொரோனா தாக்கமின்றி விழாக்களை கொண்டாட, வழிகாட்டுதல்களை வழங்கிவருகிறது. நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் ஏற்கெனவே நன்றி செலுத்துதல் விழாவைக் கொண்டாட வழிகாட்டுதல்களை வழங்கியிருக்கிறது. வெளிநாடுகளில் வாழும் இந்தியர்கள் உட்பட அனைத்து இந்தியருக்கும் நம் விழாக்களைக் கொண்டாட சில வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

கூட்டம் கூடுதலை தவிருங்கள்


நன்றி செலுத்துதல் விழாவைக் கொண்டாட சிடிசி கொடுத்த வழிகாட்டுதல்களில், இந்த ஆண்டு குடும்பம் மற்றும் நெருங்கிய நண்பர்களுடன் மட்டுமே சேர்ந்து இந்த விழாவைக் கொண்டாடுமாறுக் கேட்டுக்கொண்டுள்ளது. பாரம்பரிய முறையில், வீட்டுக்குள்ளேயே, ஒரு டின்னருடன் நெருங்கியவர்களுக்கு நன்றி தெரிவிக்குமாறு கூறியுள்ளது. உலகமே கொரோனாவால் வாதிக்கப்பட்டுக் கொண்டிருப்பதால், கூட்டம்கூடுதலை தவிர்க்கவும், வெளி நபர்களை அழைத்தை தவிர்க்கவும் வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளது.

இதேபோல்தான் இந்தியாவிலும் தீபாவளிக்கு, வீட்டிலேயே தெய்வங்களை பூஜித்துவிட்டு, நண்பர்கள் மற்றும் உறவினர்கள் ஒன்றாகக் கூடி இனிப்புகளை பகிர்ந்து பட்டாசுகளை வெடித்து கொண்டாடுவார்கள். இந்த ஆண்டு அதுபோன்ற கூட்டம் கூடுதலைத் தவிர்க்கவும்.

வேறு இடங்களுக்குச் செல்வதைத் தவிர்க்கவும்

கொரோனா நோய்த்தொற்று இந்தியாவில் பரவத் தொடங்கியபோதே பல்வேறு இடங்களில் தங்கி வேலைசெய்து வந்தவர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு திரும்பிவிட்டார்கள். அப்படி வராதவர்கள் தீபாவளிக்கு செல்லலாம் எனத் திட்டமிட்டிருப்பார்கள். இது தொற்றுப்பரவலை அதிகரிக்கும். எனவே இருக்கும் இடங்களிலேயே தீபாவளியை மகிழ்ச்சியோடு கொண்டாடலாம்.

பயணிக்கவேண்டிய கட்டாயம் ஏற்பட்டால், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முன்கூட்டியே தெரிந்துகொண்டு அதற்கு ஏற்றபடி தயார் செய்துகொள்ள வேண்டும்.

நோய்த்தொற்று காலங்களில் மகிழ்ச்சியாக விழாவைக் கொண்டாட சில வழிகள்

  • குடும்பத்தினருடன் சேர்ந்து பண்டிகை உணவுகளை சாப்பிடவேண்டும்.
  • தனிமையில் உள்ளவர்களுக்கு பண்டிகை உணவை பாதுகாப்பான முறையில் கொடுக்கவேண்டும்.
  • வெர்சுவல் டின்னர் முறையை கடைபிடிக்கலாம்.
  • பண்டிகை நாட்களை ஒட்டி ஷாப்பிங் போவதைத் தவிர்க்கவேண்டும். இதனால் கூட்ட நெரிசலைத் தவிர்க்கலாம்.
  • குடும்பத்தினருடன் சேர்ந்து ஆன்லைனில் திரைப்படங்களைப் பார்க்கலாம், கேம் விளையாடலாம்.
  • மாஸ்க் அணிதல், கைகளை கழுவுதல் மற்றும் சமூக இடைவெளி என அனைத்து கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் கடைபிடிக்க தவறவேண்டாம்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com