“சிறு, குறு தொழில் துறையில் பயமுறுத்தப்படும் விஷயமாக GST இருக்கிறது”

“சிறு குறு வியாபாரிகள் ஜிஎஸ்டி வரி பணத்தை 20 நாட்களில் செலுத்த வேண்டிய கட்டாயம் உள்ளது” - வேற்செழியன்
சிறு குறு தொழில் அமைப்பு வேற்செழியன்
சிறு குறு தொழில் அமைப்பு வேற்செழியன்புதிய தலைமுறை
Published on

சிறு குறுதொழில்கள் முன்னேற இன்றைய பட்ஜெட்டில் என்ன மாதிரியான திட்டங்கள் எதிர்பார்க்கப்பட்டன என்பது குறித்து அத்துறை சார்ந்த அமைப்பைச் சேர்ந்த வேற்செழியன் நம்மோடு பகிர்ந்துகொண்டார். அவர் பேசுகையில்,

“இந்தியாவில் மட்டும்தான் வளர்ச்சி என்ற வார்த்தையும் GDP Growth-ம் இருக்கிறது. இதில் எந்தவித மாற்றமும் இல்லை. நமது நாடு highest GTP growth in world, youngest population in India ஆகிய கொள்கைகளை முக்கிய நோக்கமாக கொண்டிருக்கிறது. காரணம் இவையே ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு முதுகெலும்பாக அமையும்.

சிறுகுறு நிறுவனங்களின் வளர்ச்சியை பொறுத்தவரை, கொரோனா சமயங்களில் மத்திய அரசு உடனடியாக ஒரு கடனை வழங்கினார்கள். அதன் பிறகு ஆறு மாதம் கழித்து மீண்டும் 10% கடனை எங்களுக்கு வழங்கினார்கள். எங்கள் சிறு குறு தொழிலுக்கு ஒரு கோடி முதல் ஐந்து கோடி வரை கடன் கொடுத்து கொண்டு இருக்கிறது. இதனால் கொரோனா சமயங்களில் எங்களின் தொழில் பாதிக்காமல் இருந்தது.

இருப்பினும் இன்னொரு விஷயம் சிக்கலாக உள்ளது. பொதுவாக நாட்டின் வளர்ச்சிக்கு ஜிஎஸ்டி என்பது தேவை. சிறு குறு வியாபாரிகள் ஜிஎஸ்டி வரி பணத்தை 20 நாட்களில் செலுத்த வேண்டிய கட்டாயம் உள்ளது. அப்படி வரி செலுத்தப்படவில்லை என்றால் கூடுதல் வரி விதிப்பு அல்லது வியாபாரிகளின் சைட்டை பிளாக் பண்ணுவது போன்றவை நடக்கின்றன. இவை பயமுறுத்தும் செயலாக உள்ளது.

இதனால் வியாபாரிகள் தங்களின் வரியான ஜிஎஸ்டி கட்ட 90 நாட்கள் அவகாசம் தேவை என்பதை வலியுறுத்துகிறோம். இல்லையென்றால் கஸ்டமரே ஜிஎஸ்டி-யை செலுத்திவிட்டு எங்கள் கணக்கில் பற்று (டெபிட்) வைத்துக்கொள்ளட்டும். இது இரண்டில் ஏதாவது ஒன்றை அரசாங்கம் இந்த பட்ஜெட்டில் அறிவித்தால், குறுந்தொழில்கள் நலிவடையாது” என்றார். இருப்பினும் அவரது எதிர்ப்பார்ப்பு இந்த பட்ஜெட்டில் நேரடியாக எவ்விதத்திலும் நிறைவேறவில்லை. பட்ஜெட்டில் என்னவெல்லாம் தாக்கல் செய்யப்பட்டது? விரிவாக கீழுள்ள இணைப்பில் அறியலாம்.

சிறு குறு தொழில் அமைப்பு வேற்செழியன்
🔴 LIVE | இடைக்கால பட்ஜெட் 2024 - 25 | 58 நிமிடங்களில் பட்ஜெட் உரையை முடித்தார் நிர்மலா சீதாராமன்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com