ஜிஎஸ்டி எதிரொலி: திருப்பதி லட்டு, டிக்கட் விலை உயர்வு

ஜிஎஸ்டி எதிரொலி: திருப்பதி லட்டு, டிக்கட் விலை உயர்வு
ஜிஎஸ்டி எதிரொலி: திருப்பதி லட்டு, டிக்கட் விலை உயர்வு
Published on

ஜிஎஸ்டி விதிப்பால் திருப்பதி திருமலை தேவஸ்தானத்திற்கு வரிச்சுமை அதிகரித்துள்ளதால் தரிசன டிக்கெட் மற்றும் லட்டு பிரசாதத்தின் விலையை உயர்த்த தேவஸ்தான தரப்பில் அரசுக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டு வருவதாக தெரியவந்துள்ளது.

திருப்பதி கோயிலில் ரூ.500, 1000 நோட்டுகள் ரத்து செய்யப்பட்ட பிறகு தினந்தோறும் பக்தர்கள் செலுத்தும் உண்டியல் காணிக்கை குறைந்துள்ளது. கடந்த 2015-16 ஆண்டில் உண்டியல் மூலம் ரூ.905 கோடியும், 2016-17 ஆண்டில் ரூ.1010 கோடியும் பக்தர்கள் செலுத்திய காணிக்கையின் மூலம் தேவஸ்தானத்திற்கு வருவாய் கிடைத்தது. இந்த நிதியாண்டில் கடந்த ஆண்டை காட்டிலும் அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்த்த நிலையில், உண்டியல் காணிக்கை குறைந்து கொண்டே வருகிறது. வழக்கமாக ஒரு நாளைக்கு சராசரியாக ரூ.3.4 கோடி காணிக்கை வந்த நிலையில் தற்போது ஒரு நாளைக்கு ரூ.2.44 கோடி உண்டியல் மூலம் காணிக்கை வருகிறது. கடந்த 6 மாதங்களில் ரூ.556 கோடி உண்டியல் மூலம் வருவாய் கிடைக்கும் என எதிர்பார்த்த நிலையில் ரூ.447.84 கோடி மட்டுமே வந்துள்ளதால், இதனால் ரூ.108 கோடி வருவாய் குறைந்துள்ளது. இனி வரும் மாதங்களில் பக்தர்கள் வருகையும் குறைவாக இருக்கும் என்பதால் உண்டியல் மூலம் வரும் காணிக்கை மேலும் குறையும் வாய்ப்புள்ளதால், இந்த நிதியாண்டில் கடந்த ஆண்டை காட்டிலும் வருவாய் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஜனவரியில் ரூ.65.13, பிப்ரவரியில் ரூ.65.36, மார்ச்சில் ரூ.82.06, ஏப்ரலில் ரூ.75.02, மே மாதம் ரூ.76.24 , ஜுன்னில் ரூ.83.31 கோடி பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தனர். இதே போல் பக்தர்கள் செலுத்தும் தலைமுடி காணிக்கை சர்வதேச அளவில் விடப்படும் ஏலத்தில் 2015-16 ஆண்டில் ரூ.200 கோடி வருவாய் கிடைத்த நிலையில், கடந்த ஆண்டு ரூ.150 கோடிக்கு விற்கப்பட்டது. இந்த ஆண்டு ரூ.100 கோடி மட்டுமே வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் லட்டு பிரசாதம் தயார் செய்ய ரூ.35 செலவாகும் நிலையில் கடந்த 2005 ஆம் ஆண்டுக்கு பிறகு விலை ஏற்றப்படவில்லை. இதனால் ரூ.250 கோடி வரை வருவாய் இழப்பு ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில் ஜிஎஸ்டி மூலமாக கூடுதலாக ரூ.75 கோடி வரை தேவஸ்தானத்திற்கு வரிச்சுமை அதிகரித்துள்ளது.‌ எ‌னவே தரிசன டிக்கெட், லட்டு பிரசாதம் ஆகியவற்றை விலை உயர்த்த அனுமதிக்கும் படி அரசுக்கு தேவஸ்தான அதிகாரிகள் பரிந்துரை செய்து அழுத்தம் அளித்துள்ளனர். இந்நிலையில் விஜயவாடாவில் நிருபர்களுக்கு பேட்டியளித்த ஆந்திர மாநில நிதியமைச்சர் ராமகிருஷ்ணா திருமலையில் ரூ.500 க்கு மேல் உள்ள அறைகளுக்கு ஜிஎஸ்டி வரி வசூல் செய்யப்படும் என தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com