மக்கள் அன்றாடம் சமையலில் பயன்படுத்தும் உப்பில் தொடங்கி, வங்கிகள் பயன்படுத்தும் மென்பொருள் வரை என டாடா குழுமம் பல நாடுகளில் தடம் பதித்து வளர்ந்ததற்கு காரணமாக இருந்தவர் ரத்தன் டாடா. அவரின் தலைமையின் கீழ் அசுர வளர்ச்சி அடைந்த டாடா குழுமம், கால் பதித்த துறைகளை பற்றி பார்க்கலாம்....
"நீ என்ன பெரிய டாடா - பிர்லாவா? " என்ற சொலவடையை நாம் அனைவரும் கடந்து வந்திருப்போம். அப்படி இந்திய தொழில்துறையில் தவிர்க்க முடியாத அங்கமாக மாறியவர்தான் ரத்தன் டாடா. அவரது தலைமையின் கீழ் சந்தையை விரிவுப்படுத்திய டாடா குழுமத்தின் கிளை நிறுவனங்களும், அதன் உற்பத்திப் பொருட்களும் தற்போது 100க்கும் மேற்பட்ட நாடுகளில் பரந்து விரிந்துள்ளன.
உணவுப் பொருள் துறையில், டாடா சால்ட், டாடா டீ, டெட்லி, ஹிமாலயன் போன்ற தயாரிப்புகள் டாடா குழுமத்தைச் சேர்ந்தவை. அத்துடன் பிரபல ஸ்டார்பக்ஸ் நிறுவனத்துடனும் கைகோர்த்துள்ளது டாடா...
லைப்ஸ்டைல் துறையில், ஃபாஸ்ட்ராக், தனிஷ்க், டைட்டன், TRENT, வெஸ்ட்சைடு, தனெய்ரா, ஆட்டோமொபைல் துறையில் டாடா மோட்டார்ஸ், ஜாகுவார் லேண்ட்ரோவர் போன்றவையும் டாடா குழும நிறுவனங்களே. தொழில்நுட்பத்தில் டிசிஎஸ், டாடா கிளாஸ் எட்ஜ் , போக்குவரத்து, ஓட்டல் மேலாண்மை துறைகளில் தாஜ், ஏர் ஏசியா, ஏர் இந்தியா, விஸ்தாரா, தாஜ் போன்றவையும் குறிப்பிடத்தகுந்தவை.
வர்த்தகத்தில், க்ரோமா, டாடா நியூ, பிக் பேஸ்கட், டாடா கிளிக்... டெலிகாம் மற்றும் ஊடகத்தில் டாடா ப்ளே போன்றவையும் டாடா குழுமத்தின் குழந்தைகளே. இதே போன்று, உலோகம், நிதி, அடிப்படை கட்டமைப்பு, ஏரோஸ்பேஸ் உள்ளிட்ட துறைகளில் தடம் பதித்துள்ளது டாடா குழுமம்.