மணமேடையில் குட்கா தின்றுகொண்டிருந்த மணமகனை திருமணம் செய்ய மாட்டேன் என்று மணப்பெண் கூறியதால் திருமணம் நின்றது.
உத்தரப் பிரதேச மாநிலம் பல்லியா மாவட்டம் முரார்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் இளம்பெண் தேவி (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவருக்கும் அதன் அருகிலுள்ள டலன் சபாரா பகுதியை சேர்ந்த இளைஞருக்கும் திருமணம் செய்ய இரு வீட்டு பெற்றோரும் முடிவு செய்தனர். அதன்படி லால்கஞ்ச் என்ற கிராமத்தில் திருமணம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது. இரு வீட்டு உறவினர்களும் திருமண வீட்டில் கூடியிருக்க, மகிழ்ச்சியாகச் சென்றுகொண்டிருந்தது திருமணச் சடங்கு.
மந்திரங்கள் ஓதிக்கொண்டிருக்கும்போதுதான் மணமகனைக் கவனித்தார் தேவி. குட்காவை மென்று கொண்டிருந்தார் அவர். மணப்பெண்ணுக்கு ஆத்திரம் ஆத்திரமாக வந்தது. ஏனென்றால் குட்கா தின்கிற ஆட்களை அவருக்கு பிடிக்கவே பிடிக்காது.
தாலி கட்டும் நேரத்தில் கூட, குட்காவை சவைக்கிறான் என்றால் இவன் அதற்கு அடிமையாகிவிட்டவன் என்பதை முடிவு செய்தார் தேவி. தாலிகட்டும் நேரத்தில் அவன் கையை தட்டிவிட்டுவிட்டு சினிமா ஸ்டைலில் மேடையில் இருந்து இறங்கி விட்டார் மணமகள். கூட்டத்தினருக்கு அதிர்ச்சி. என்னாச்சு என்று கேட்க, குட்கா தின்கிற அவனை திருமணம் செய்ய மாட்டேன் என்று தேவி சொன்னதையடுத்து திருமண வீட்டில் பிரச்னை ஏற்பட்டது. மணமகன் வீட்டினர் போலீசில் புகார் செய்தனர். அவர்கள் விசாரித்து வருகின்றனர்.