ஜம்மு-காஷ்மீரில் மக்கள் அதிகம் கூடும் சந்தையில் பயங்கரவாதிகள் கையெறி குண்டுகளால் நடத்திய தாக்குதலில் 12 பேர் காயம் அடைந்தனர்.
ஸ்ரீநகரில் நேற்று வாரச்சந்தை கூடிய நிலையில், பொருட்களை வாங்க மக்கள் குவிந்தனர். அப்போது, அங்கு வந்த பயங்கரவாதிகள் சிலர், கையெறி குண்டுகளை வீசிவிட்டு தப்பினர். இதில் பெண் உட்பட 12 பேர் காயம் அடைந்த நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இச்சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், தாக்குதல் நடத்தியவர்கள் மீது சட்டவிரோத செயல்கள் தடுப்புச் சட்டத்தின் கீழ் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இச்சம்பவத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள முதலமைச்சர் உமர் அப்துல்லா, அப்பாவி பொதுமக்களை குறிவைத்து தாக்குவதை ஒருபோதும் நியாயப்படுத்த முடியாது என கூறியுள்ளார். இதற்கிடையே, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவோரை நேரில் சந்தித்து ஜம்மு- காஷ்மீர் ஐஜி குமார் பிர்தி ஆறுதல் கூறினார்.