”10th Fail ஆன மணமகன் வேண்டாம்” - திடீரென திருமணத்தை நிறுத்திய இளம்பெண்.. உ.பியில் அதிர்ச்சி!

உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர், தனக்குப் பார்த்த மணமகன் தன்னைவிடக் குறைவாகப் படித்ததற்காக திருமணத்தையே வேண்டாம் எனக் கூறியிருப்பது பேசுபொருளாகி உள்ளது.
உ.பி. ஜோடி
உ.பி. ஜோடிஎக்ஸ் தளம்
Published on

திருமணம் என்பது சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுவதாகச் பலரால் நம்பப்பட்டாலும், பெண் வீட்டாரும், மாப்பிள்ளை வீட்டாரும் அனைத்துவித பொருத்தங்கள், வசதிவாய்ப்புகள் உள்ளிட்டவற்றைப் பார்த்தே மணமுடிக்கின்றனர். இன்னும் சிலரோ எதையும் எதிர்பார்க்காமல் காதல் திருமணம் செய்துகொள்கின்றனர். தமிழ்நாட்டில் சிலர் சுயமரியாதை திருமணங்களை செய்து கொள்கின்றனர். பொதுவாகவே, இன்றைய இளைஞர்களும், பெண்களும் தமக்கான வரன்களைத் தேடிக் கொள்வதுடன், அவற்றைச் சிறப்பாய்த் தேர்ந்தெடுப்பதிலும் அதிக ஆர்வம் காட்டுகின்றனர்.

திருமணம்
திருமணம்

அப்போதுதான் அவர்களுடைய எதிர்கால வாழ்க்கை சிறப்பாய் அமையும் என அவர்கள் நம்புகின்றனர். அந்த வகையில், உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர், தனக்குப் பார்த்த மணமகன் தன்னைவிடக் குறைவாகப் படித்ததற்காக திருமணத்தையே வேண்டாம் எனக் கூறியிருப்பது பேசுபொருளாகி உள்ளது.

இதையும் படிக்க: இஸ்ரேல் பிரதமருக்கு எதிராக கைது வாரண்ட்.. சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் அதிரடி! பின்னணி இதுதான்!

உ.பி. ஜோடி
உத்தரப்பிரதேசம்: போலீஸார் கண்முன்னே பாஜக எம்எல்ஏ-வை அறைந்த வழக்கறிஞர்.. காரணம் என்ன? #ViralVideo

உத்தரப்பிரதேசம் மாநிலம், சுல்தான்பூர் மாவட்டத்தில் உள்ள முஸ்த்பாபாத் கலா கிராமத்தில் கடந்த நவம்பர் 17ஆம் தேதி 28 வயது நிரம்பிய ஜெயமாலா என்ற பெண்ணுக்கும் டெல்லியில் கூலி வேலை செய்துவரும் 30 வயது இளைஞருக்கும் திருமணம் நடைபெறுவதாக இருந்தது. ஆனால் கடைசி நேரத்தில் அந்த இளைஞரை திருமணம் செய்துகொள்ளமாட்டேன் என அந்த மணப்பெண் மறுத்துள்ளார்.

இதனால், திருமணம் நின்றுபோனது. விசாரணையில், மணமகன் வெறும் 10ஆம் வகுப்பு மட்டுமே படித்திருந்ததாகத் தெரிகிறது. அதிலும் அவர் ஃபெயிலானதாகக் கூறப்படுகிறது. அதேநேரத்தில், மணமகள் பட்டப்படிப்பு முடித்துள்ளார். இதனாலேயே அந்த மணமகனை திருமணம் செய்து கொள்ள மாட்டேன் என மணப்பெண் உறுதியாகத் தெரிவித்துள்ளார்.

மேலும், மணமகன் மனவளர்ச்சி குன்றியிருப்பதாகவும் மணப்பெண் தெரிவித்துள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக இருதரப்பும் மணமகளிடம் பல மணிநேரம் பேச்சுவார்த்தை நடத்தியும் எந்தப் பலனும் ஏற்படவில்லை. பின்னர் இந்த விவகாரம் போலீஸ் நிலையம் சென்றது. அவர்கள் மூலம் சமாதானம் பேசப்பட்டது. அந்த வகையில், திருமணம் பாதியில் நின்றதால் வரதட்சனையாக கொடுக்கப்பட்ட நகை, பணம் ஆகியவற்றை பெண் குடுமபத்தினரிடம் மணமகன் வீட்டார் திரும்ப ஒப்படைத்தனர். இந்த சம்பவம் உ.பியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிக்க: புதிய உச்சத்தை தொட்டது பிட்காயின் மதிப்பு! நவ.5-க்கு பிறகு கிடுகிடு உயர்வு.. பின்னணி காரணம் இதுதானா?

உ.பி. ஜோடி
உத்தரப்பிரதேசம்| ரூ.500 திருடியதற்காக 10 வயது சிறுவனை அடித்தே கொன்ற தந்தை!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com