வாட்ஸ் அப் பாதுகாப்பானதா ? தணிக்கை செய்ய முடிவு

வாட்ஸ் அப் பாதுகாப்பானதா ? தணிக்கை செய்ய முடிவு
வாட்ஸ் அப் பாதுகாப்பானதா ? தணிக்கை செய்ய முடிவு
Published on

வாட்ஸ் அப்பின் பாதுகாப்பு அம்சங்கள் குறித்து தணிக்கை செய்ய மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டிருப்பதாக தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார்.

121 இந்தியர்கள் உள்பட உலகம் முழுவதும் 1,400 பேரின் வாட்ஸ்அப் கணக்குகள் ஹேக் செய்யப்பட்டதாகப் புகார் எழுந்தது. இஸ்ரேல் நாட்டைச் சேர்ந்த தகவல் தொழில்நுட்ப நிறுவனம் ஒன்று பிகாசஸ் என்ற SPY WARE மூலம் வாட்ஸ்அப் கணக்குகளை வேவு பார்த்ததாக கூறப்பட்டது. இதுகுறித்து மாநிலங்களவையில் காங்கிரஸ் உறுப்பினர் திக்விஜய் சிங் கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதில் அளித்த அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், வாட்ஸ்அப்பின் பாதுகாப்பு அம்சங்கள் குறித்து தணிக்கை செய்ய அரசு நடவடிக்கை எடுத்து வருவதாகக் கூறினார். இதுதொடர்பாக வாட்ஸ் அப் நிறுவனத்துக்கு மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சகம் கடிதம் அனுப்பியுள்ளதாகவும், அதற்கு அவர்கள் பதில் அளித்திருப்பதாகவும் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்தார்.

எனினும் கூடுதல் விவரங்களைத் தரும்படி வாட்ஸ்அப் நிறுவனத்துக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளதாக கூறினார். தகவல் பாதுகாப்பு சட்டமுன்வடிவை மத்திய அரசு விரைவில் அறிமுகப்படுத்த உள்ளதாகவும், சைபர் பாதுகாப்பை உறுதி செய்யாவிட்டால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என சமூக வலைத்தளங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டிருப்பதாகவும் மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com