பசுக்களை பாதுகாக்கும் அரசு பெண்களின் பாதுகாப்புக்கு என்ன செய்கிறது என சமாஜ்வாதி கட்சியின் எம்.பி. ஜெயாபச்சன் மாநிலங்களவையில் கேள்வி எழுப்பினார்.
பாரதிய ஜனதாவின் இளைஞரணி தலைவர் யோகேஷ் மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் தலைக்கு 11 லட்சம் ரூபாய் பரிசு அறிவித்தது சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த விவகாரம் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் எழுப்பப்பட்டது. மாநிலங்களவையில் இதனை எழுப்பிய சமாஜ்வாதி எம்பி ஜெயா பச்சன், ஒரு பெண்ணை பற்றி அவர் இப்படி பேசலாமா எனவும், இப்படித்தான் நீங்கள் நாட்டில் உள்ள பெண்களை பாதுகாக்க போகிறீர்களா என்றும் அரசுக்கு கேள்வி எழுப்பினார். பசுக்களை பாதுகாக்கும் அரசு பெண்களை பாதுகாக்கிறதா எனவும் வினவினார். இதனிடையே யோகேஷின் கருத்துக்கு கண்டனம் தெரிவித்த மத்திய அமைச்சர் முக்தர் அப்பாஸ் நக்வி மாநில அரசு அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறினார்.