இந்தியாவின் 70வது குடியரசு தினத்தை முன்னிட்டு, நாட்டின் உயரிய விருதுகளான பத்ம விபூஷன், பத்ம பூஷன் மற்றும் பத்மஸ்ரீ விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
சமூக சேவகர் மதுரை சின்னப் பிள்ளை, தமிழகத்தைச் சேர்ந்த டேபிள் டென்னிஸ் வீரர் ஷரத் கமல் ஆகியோருக்கு பத்மஸ்ரீ விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அத்துடன் தமிழகத்தை சேர்ந்த மேல்மருத்துவத்தூர் பங்காரு அடிகளார், நர்த்தகி நட்ராஜ், மருத்துவர் ஆர்.வி.ரமணி மற்றும் டிரம்ஸ் சிவமணி ஆகியோருக்கும் பத்மஸ்ரீ விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இதுதவிர நடிகர் பிரபு தேவா, கால்பந்து வீரர் சுனில் சேத்ரி, பம்பைலால் தேவி, முன்னாள் வெளியுறவுத்துறைச் செயலர் ஜெய்சங்கர், பாடகர் சங்கர் மகாதேவன், முன்னாள் கிரிக்கெட் வீரர் கவுதம் கம்பீர் உட்பட 94 பேருக்கு பத்மஸ்ரீ விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. மேலும், நடிகர் மோகன்லால், முன்னாள் இஸ்ரோ விஞ்ஞானி நம்பிநாராயணன், மறைந்த எழுத்தாளர் குல்தீப் நாயர், முன்னாள் மக்களவைத் துணை சபாநாயகர் கரிய முண்டா, மக்களவை உறுப்பினர் நாராயண யாதவ் உட்பட 14 பேருக்கு பத்ம பூஷண் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.