7,287 கிராமங்களுக்கு 4ஜி சேவை வழங்கும் திட்டத்திற்கு மத்திய அரசு அனுமதி

7,287 கிராமங்களுக்கு 4ஜி சேவை வழங்கும் திட்டத்திற்கு மத்திய அரசு அனுமதி
7,287 கிராமங்களுக்கு 4ஜி சேவை வழங்கும் திட்டத்திற்கு மத்திய அரசு அனுமதி
Published on

ஆந்திரப்பிரதேசம், சத்தீஸ்கர், ஜார்க்கண்ட், மகாராஷ்ட்ரா மற்றும் ஒடிசா ஆகிய மாநிலங்களில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் இதுவரை செல்போன் சேவை கிடைக்கபெறாத கிராமங்களுக்கு மொபைல் டவர் அமைத்து அலைபேசி சேவையை வழங்க ஒப்புதல் மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

இந்தத் திட்டத்தின் மூலம் 7,287 கிராமங்களுக்கு 4ஜி செல்போன் சேவை வழங்க, ஐந்தாண்டுகளுக்கான செயல்பாட்டு செலவு உட்பட ரூ.6,466 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் புதன்கிழமை அன்று நடைபெற்ற பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவை கூட்டத்தில் இதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

இதுவரை சேவை கிடைக்கப்பெறாத கிராமங்களில் 4ஜி செல்போன் சேவை வழங்குவதற்கான பணிகள், திறந்தவெளி போட்டி மூலம், உலகளாவிய சேவை உதவி நிதியத்தின் விதிமுறைகளுக்கு உட்பட்டு வழங்கப்படவுள்ளது.ஆந்திரப்பிரதேசம், சத்தீஸ்கர், ஜார்க்கண்ட், மகாராஷ்டிரா மற்றும் ஒடிசா ஆகிய 5 மாநிலங்களில் தொலைதூர மற்றும் சேவை கிடைக்கப்பெறாத சிக்கலான கிராமங்களில் செல்போன் சேவை வழங்குவதற்கான இந்த புதிய திட்டம், தற்சார்புக்கான டிஜிட்டல் இணைப்பு வசதியை மேம்படுத்தவும், கல்வி கற்கவும், தகவல்கள் மற்றும் அறிவாற்றலை வெளிப்படுத்தவும், திறன் மேம்பாடு, பேரிடர் மேலாண்மை, மின்னணு ஆளுகை முயற்சிகள், மற்றும் புதிய தொழில் நிறுவனங்களை தொடங்குவதற்கும் உதவிகரமாக இருக்கும் என மத்திய அரசு கருதுகிறது.

மின்ணணு வர்த்தகத்திற்கும் உதவிகரமாக அமைவதுடன், கல்வி நிறுவனங்கள் அறிவாற்றலை பகிர்ந்து கொள்ளவும், வேலை வாய்ப்புகளை அறிந்து கொள்ளவும், டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் நோக்கத்தை நிறைவேற்றி, உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவித்து, தற்சார்பு இந்தியாவின் குறிக்கோள்களை நிறைவேற்றவும் இந்தத் திட்டம் வழிகோலும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com