மூத்த குடிமக்கள் பலர் தங்களுக்கான சலுகைகளை விட்டுத்தந்ததால் ரயில்வேத் துறை 40 கோடி ரூபாயை மிச்சப்படுத்தியுள்ளது.
60 வயதைக் கடந்தவர்களுக்கு ரயில்களில் 50% கட்டணச் சலுகை அளிக்கப்பட்டு வருகிறது. இதனால் ரயில்வேத் துறைக்கு ஆண்டுதோறும் ஆயிரத்து 300 கோடி ரூபாய் கூடுதல் செலவாகிறது. இந்நிலையில் மூத்த குடிமக்கள் சலுகை பெற விரும்பாத முதியவர்கள் அதை முன்பதிவு படிவத்தில் குறிப்பிடலாம் என ரயில்வேத் துறை குறிப்பிட்டிருந்தது.
மேலும் கட்டணச் சலுகையில் 50 சதவிகிதத்தை விட்டுத்தரவும் வாய்ப்பு வழங்கப்பட்டது. இதன்படி கடந்த 3 மாதங்களில் 14 லட்சம் பேர் சலுகைகளை முழுமையாகவும் பகுதியளவிலும் விட்டுத்தந்துள்ளனர்.