‘இந்தியா டுடே’ தொலைக்காட்சி சார்பில் நடத்தப்பட்ட ஆய்வில் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கான மாநிலங்களின் பட்டியலில் முதலிடத்தை தமிழ்நாடு பெற்றுள்ளது. தொடர்ந்து நான்கு ஆண்டுகளாக தமிழ்நாடு இந்த விருதினை பெறுகிறது.
>கடந்த காலத்தை விட முன்னேறிய மாநிலப் பட்டியலில் பீகாருக்கு முதலிடம் கிடைத்துள்ளது. >பொருளாதாரத்தில் முன்னேறிய மாநிலமாக தெலுங்கானா அறிவிக்கப்பட்டுள்ளது.
>அடிப்படை கட்டமைப்பு வசதிகள் மற்றும் வேளாண் வளர்ச்சியில் பஞ்சாப் மாநிலம் அறிவிக்கப்பட்டுள்ளது.
>சுகாதாரத்தில் முதலிடம் கேரளாவுக்கு கிடைத்துள்ளது.
>கல்வியில் முதலிடம் இமாச்சல் பிரதேசம் மாநிலத்திற்கு கிடைத்திருக்கிறது.
>சட்டம் ஒழுங்கு பேணிக்காப்பதில் குஜராத் மாநிலம இந்திய அளவில் முதன்மையான இடத்தில் இருக்கிறது.
>நிர்வாக ரீதியான செயல்பாடுகளில் ராஜஸ்தான் மாநிலம் முதலிடத்தை பிடித்துள்ளது.
>ஒருங்கிணைத்த வளர்ச்சியில் ஆந்திரப்பிரதேசம் முதலிடத்தில் உள்ளது.
>அதிக தொழில் முனைவோர் உருவாகும் மாநிலமாக ஹரியானா முதலிடத்தில் உள்ளது.
>சுற்றுலா மற்றும் சுற்றுச்சூழல் பராமரிப்பதில் கேரளா முதலிடம்.
>சுத்தமாக உள்ள மாநிலத்தில் பஞ்சாபிற்கு முதலிடம்.
>ஒட்டுமொத்த வளர்ச்சியில் தமிழகம் முதல் இடத்தில் உள்ளதாகவும் அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கான விருது வழங்கும் நிகழ்ச்சி விரைவில் நடைபெறும் எனவும் தகவல் வெளியாகி உள்ளது.