கொரோனா தாக்கத்தை பேரிடராக கருதி நடவடிக்கை எடுக்குமாறு மாநில அரசுகளுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.
கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் கடும் அச்சுருத்தலை ஏற்படுத்தி வருகிறது. இந்த வைரஸ் பாதிப்பு தற்போது வரை 127 நாடுகளுக்கு பரவியுள்ளது. சீனாவில் தற்போது வரை இந்த வைரஸ் பாதிப்பிற்கு 3000 த்துக்கும் மேற்ப்பட்டோர் உயிழந்துள்ளனர். இதற்கு அடுத்தப்படியாக இத்தாலியில் அதிக உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. இந்தியாவை பொறுத்தவரை தற்போது 85 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்த வைரஸ் பாதிப்பு மேலும் பரவாமால் இருக்க மத்திய மாநில அரசுகள் தீவிர முயற்சிகளை மேற்கொண்டுவருகிறது. அந்த வகையில், கொரோனா தாக்கத்தை பேரிடராக கருதி தேவையான நடவடிக்கைகளை எடுக்க மாநில அரசுகளுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. பெரும் தொற்று நோய் என உலக சுகாதார அமைப்பு அறிவித்த நிலையில், கொரோனாவை கட்டுப்படுத்த மத்திய அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.
பேரிடர் அறிவிப்பின்படி, கொரோனாவில் உயிரிழந்த குடும்பத்தினருக்கு தலா ரூ4 லட்சம் நிவாரணம் அளிக்கப்படும். கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கான மருத்துவ உதவிகளை தேசிய மருத்துவ அமைப்பு வழங்கம். கொரோனாவில் பாதிக்கப்பட்டவர்களின் மருத்துவ செலவை மாநில அரசே நிர்ணயிக்கும்.