மத்திய அரசின் பீம் செயலி மூலம் மின்னணு முறையில் பணப்பரிமாற்றம் செய்பவர்களுக்கு சலுகைகள் வழங்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மத்திய அரசு நிறுவனமான இந்திய தேசிய பண வழங்கீடு கூட்டமைப்பு மூலம் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைக்கான மொபைல் அப்ளிகேஷன் பீம் அறிமுகம் செய்யப்பட்டது. தற்போது பீம் செயலியை 40 லட்சம் பயனர்கள் பயன்படுத்தப்படுத்துகின்றனர்.
பீம் செயலியை பயன்படுத்துபவர்களுக்கு குறிப்பிட்ட அளவு தொகையை திரும்பத் தரும் சலுகை (Cashback) குறித்த அறிவிப்பு சுதந்தர தினத்தின் போது வெளியாக வாய்ப்புள்ளதாக தேசிய பணப்பட்டுவாடா ஆணையத்தின் நிர்வாக இயக்குநர் ஏ.பி.ஹோத்தா தெரிவித்துள்ளார். பீம் செயலியை கடந்தாண்டு பிரதமர் மோடி அறிமுகப்படுத்தினார். தற்போது அதன் மேம்படுத்தப்பட்ட வடிவம் வெளியாக உள்ளது. இந்த மொபைல் அப்ளிகேஷனை பயன்படுத்தி யூபிஐ வாயிலாக பணபரிவர்த்தனை செய்யலாம்.