எஜமானின் 2 1/2 வயது குழந்தையை கண்டறிந்த குவி நாய் - மோப்ப நாய் படைபிரிவில் வேலை

எஜமானின் 2 1/2 வயது குழந்தையை கண்டறிந்த குவி நாய் - மோப்ப நாய் படைபிரிவில் வேலை
எஜமானின் 2 1/2 வயது குழந்தையை கண்டறிந்த குவி நாய் - மோப்ப நாய் படைபிரிவில் வேலை
Published on

கேரள நிலச்சரிவில் தனது எஜமானின் இரண்டரை வயது குழந்தையை கண்டெடுத்த குவி நாய்க்கு, கேரள மோப்ப நாய் படைபிரிவில் அரசு பணி கிடைத்துள்ளது. 

கேரள மாநிலம் மூணாறு அருகே ஏற்பட்ட நிலச்சரிவில் பலர் மண்ணில் புதையுண்டும், சிலர் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டும் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. அங்கு காணாமால் போன நபர்களை தேடும் பணியில் மீட்பு படையினர் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னதாக, குவி என்னும் நாய் அவரது எஜமானின் 2 1/2 வயது குழந்தையை கண்டறிந்தது.

அதனைத்தொடர்ந்து அப்பகுதியில் சுற்றித்திரிந்த குவியின் செயல்பாடுகளால் ஈர்க்கப்பட்ட மோப்ப நாய் படைப்பிரிவு அதிகாரி அஜித் மாதவன் அதனை தத்தெடுத்து வளர்க்க அரசிடம் கோரிக்கை வைத்தார். மேலும்  குவியை மோப்ப நாய் படைபிரிவில் இணைக்கவும் அவர் பரிந்துரை செய்திருந்தார். இந்நிலையில் அதற்கு தற்போது கேரள அரசு அனுமதியளித்துள்ளது. இதனையடுத்து பெட்டி முடி மக்கள், குவியை அஜித் மாதவனிடம் ஒப்படைத்தனர். 10 நாட்கள் பயிற்சிக்குப் பிறகு குவி மோப்ப நாய் படை பிரிவில் அனுமதிக்கப்படும் எனக் கூறபட்டுள்ளது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com