அரசு மருத்துவர்களுக்கு, மருத்துவ மேற்படிப்பில் சலுகை மதிப்பெண்கள் வழங்கலாம் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தொலைதூர, கடினமான மற்றும் ஊரகப் பகுதிகளில் பணிபுரியும் அரசு மருத்துவர்களுக்கு, முதுநிலை மருத்துவ படிப்பு சேர்க்கையில் சலுகை மதிப்பெண்கள் வழங்கப்பட்டு வருகிறது. இதனை எதிர்த்து தனியார் மருத்துவர்கள், தமிழ்நாடு மருத்துவ அலுவலர் சங்கம் உள்ளிட்ட அமைப்புகள் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்குகள் நீதிபதிகள் அருண் மிஸ்ரா, இந்திரா பானர்ஜி, வினீத் சரண், எம்.ஆர்.ஷா, அனிருதா போஸ் ஆகியோர் அடங்கிய அரசியல் சாசன அமர்வு முன்பு விசாரிக்கப்பட்டன. விசாரணை நிறைவடைந்துள்ள நிலையில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில் அரசு மருத்துவர்களுக்கு மருத்துவ மேற்படிப்பில் சலுகை மதிப்பெண்கள் வழங்கலாம் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.