கொரோனா தீவிரம் எதிரொலி: குறைந்த விலைக்கு 'ரெம்டெசிவிர்' கிடைக்க அரசு முயற்சி!

கொரோனா தீவிரம் எதிரொலி: குறைந்த விலைக்கு 'ரெம்டெசிவிர்' கிடைக்க அரசு முயற்சி!
கொரோனா தீவிரம் எதிரொலி: குறைந்த விலைக்கு 'ரெம்டெசிவிர்' கிடைக்க அரசு முயற்சி!
Published on

நாட்டில் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாகி வரும் நிலையில், இந்த வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு எளிதில் 'ரெம்டெசிவிர்' மருந்து கிடைக்க மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது.

இதுதொடர்பாக மத்திய அரசு வெளியிட்ட தகவல்: கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க பயன்படும் 'ரெம்டெசிவிர்' மருந்து கிடைப்பதில் உள்ள பிரச்னை குறித்து மத்திய ரசாயனத்துறை இணையமைச்சர் மன்சுக் மாண்டவியா, 'ரெம்டெசிவிர்' மருந்து தயாரிப்பாளர்கள் மற்றும் இதர தரப்பினருடன் கடந்த 12 மற்றும் 13-ம் தேதிகளில் ஆலோசனை நடத்தினார். இதில், 'ரெம்டெசிவிர்' மருந்து உற்பத்தி, விநியோகத்தை அதிகரிக்கவும், விலையை குறைக்கவும் முடிவுகள் எடுக்கப்பட்டன.

தற்போதுள்ள 7 'ரெம்டெசிவிர்' தயாரிப்பு நிறுவனங்களின் ஒரு மாத உற்பத்தி திறன் 38.80 லட்சம் குப்பிகளாக உள்ளன. கூடுதலாக 7 இடங்களில் மாதத்துக்கு 10 லட்சம் குப்பிகளை உற்பத்தி செய்ய 6 நிறுவனங்களுக்கு விரைவு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. மேலும், மாதத்துக்கு 30 லட்சம் குப்பிகள் தயாரிக்கும் திட்டம் தயாராகிறது. இந்த நடவடிக்கை, ரெம்டெசிவிர் தயாரிப்புத் திறனை மாதத்துக்கு 78 லட்சம் குப்பிகளாக அதிகரிக்கும்.

உள்நாட்டு சந்தையில் 'ரெம்டெசிவிர்' விநியோகத்தை அதிகரிக்க, கூடுதல் நடவடிக்கையாக, 'ரெம்டெசிவிர்' மற்றும் அதை தயாரிக்க பயன்படுத்தப்படும் மருந்துகள் ஏற்றுமதிக்கு வெளிநாட்டு வர்த்தக இயக்குனரகம் கடந்த 11-ம் தேதி தடை விதித்துள்ளது. மத்திய அரசின் தலையீட்டின்படி, ஏற்றுமதிக்கு தயாராக இருந்த 4 லட்சம் 'ரெம்டெசிவிர்' குப்பிகள் உள்நாட்டு தேவைக்கு தற்போது திருப்பிவிடப்பட்டுள்ளது.

கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு ஆதரவாக, ரெம்டெசிவிர் மருந்தின் விலையை இந்த வார இறுதியில் ரூ.3.500/-க்கும் கீழ் குறைக்க 'ரெம்டெசிவிர்' தயாரிப்பாளர்கள் தானாக முன்வந்துள்ளனர். மருத்துவமனைகளுக்கான விநியோகத்தை பூர்த்தி செய்வதில் முன்னுரிமை அளிக்கும்படி 'ரெம்டெசிவிர்' தயாரிப்பு நிறுவனங்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

'ரெம்டெசிவிர்' மருந்தை கள்ளச்சந்தையில் அதிக விலைக்கு விற்றால் உடனடியாக நடவடிக்கை எடுக்கும்படி மத்திய, மாநில அமலாக்க அதிகாரிகளுக்கு இந்திய மருந்து தலைமை கட்டுப்பாட்டாளர் உத்தரவிட்டுள்ளார். 'ரெம்டெசிவிர்' மருந்து விநியோகத்தை தேசிய மருந்துகள் விலை ஆணையம் தொடர்ந்து கண்காணித்து வருகிறது.

- கணபதி சுப்ரமணியம்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com