“பயங்கரவாதிகளுக்கு உதவியதால் ரூ. 12 லட்சம் கிடைத்தது” - கைது செய்யப்பட்ட டிஎஸ்பி வாக்குமூலம்

“பயங்கரவாதிகளுக்கு உதவியதால் ரூ. 12 லட்சம் கிடைத்தது” - கைது செய்யப்பட்ட டிஎஸ்பி வாக்குமூலம்
“பயங்கரவாதிகளுக்கு உதவியதால் ரூ. 12 லட்சம் கிடைத்தது” - கைது செய்யப்பட்ட டிஎஸ்பி வாக்குமூலம்
Published on

டெல்லிக்கு செல்ல பயங்கரவாதிகளுக்கு உதவியதால் ரூ. 12 லட்சம் கிடைத்ததாக கைது செய்யப்பட்ட டிஎஸ்பி தாவிந்தர் சிங் வாக்குமூலம் அளித்துள்ளார்.

குடியரசு தினம் நெருங்கி வரும் நிலையில், பயங்கராவாதிகளுக்கு காவல்துறை அதிகாரி ஒருவரே உதவி செய்ய முன் வந்திருப்பது பாது‌காப்பு விவகாரத்தில் பெரும் கவலையை ஏற்படுத்தி இருக்கிறது.

ஜம்மு காஷ்மீரில் உள்ள சோபியான் பகுதியில் இருந்து கடந்த சனிக்கிழமை அன்று இரு பயங்கரவாதிகள் ஜம்மு நோக்கி தேசிய நெடுஞ்சாலையில் சென்றுக் கொண்டிருப்பதாக மாவட்ட எஸ்பிக்கு உளவுத்துறை தகவல் அளித்தது. அதன் அடிப்படையில் தேசிய நெடுஞ்சாலையில் வாகன தணிக்கை அமைத்து, காவல்துறையினர் சோதனை நடத்தி வந்தனர். அப்போது ஸ்ரீநகர் விமான நிலையத்தில் கடத்தல் தடுப்பு பிரிவின் டிஎஸ்பியாக பணியாற்றி வரும் தாவிந்தர் சிங் ஒரு வாக‌னத்தில் வந்துக் கொண்டிருந்தார். அவரது வாகனத்தையும் காவல்துறை அதிகாரிகள் சோதனை நடத்தியதில், ‌இரு பயங்கரவாதிகள் பதுங்கி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதனால், அதிர்ச்சியடைந்த காவல்துறையினர், மூன்று பேரையும் கைது செய்து விசாரணைக்கு அழைத்துச் செ‌ன்றனர். இதையடுத்து நேற்று டிஎஸ்பி தாவிந்தர் சிங் இடைநீக்கம் செய்யப்பட்டார். மேலும், போர்குண எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கான ஜனாதிபதியின் பதக்கம் உள்ளிட்ட அனைத்து பதக்கங்களும் பறிக்கப்படலாம் எனத் தெரிகிறது.

இந்நிலையில், விசாரணையில், டெல்லிக்கு செல்ல பயங்கரவாதிகளுக்கு உதவியதால் ரூ. 12 லட்சம் கிடைத்ததாக கைது செய்யப்பட்ட டிஎஸ்பி தாவிந்தர் சிங் வாக்குமூலம் அளித்துள்ளார். இதற்கிடையில், பயங்கரவாதிகளின் உண்மையான நோக்கம், தாவிந்தருக்கு பயங்கரவாதத்துடனான தொடர்புகள் மற்றும் கடந்த காலங்களில் பயங்கரவாதிகளுக்கு அவர் உதவினாரா என்பதைக் கண்டறிய மத்திய உள்துறை அமைச்சகம் இந்த வழக்கை என்ஐஏவிடம் ஒப்படைக்கும் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

கடந்த வாரம் மத்திய அரசின் அழைப்பின் பேரில் ஸ்ரீநகருக்கு விஜயம் செய்த 15 நாடுகளின் தூதர்களுக்கு பாதுகாப்பு வழங்குவதை உறுதி செய்யும் கடமையில் தாவிந்தர் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com