மக்கள் தங்களுக்கு அருகாமையில் உள்ள கொரோனா தடுப்பூசி மையங்களை அடையாளம் காணும் வசதியை கூகுள் தேடுதளம் வழங்க உள்ளது.
கூகுளின் கூகுள் சர்ச், மேப்ஸ், அசிஸ்டன்ட் உள்ளிட்ட தனது பிரிவுகளுக்கு சென்றால் கொரோனா தடுப்பூசி மையங்களை அடையாளம் காணும் வசதியை கூகுள் வழங்க உள்ளது.
இது குறித்து கூகுள் நிறுவனம் கூறும் போது, “ மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்தின் உதவியுடன் இந்த சேவையை வழங்க உள்ளோம். கொரோனா தடுப்பூசிகளின் செயல் திறன், பாதுகாப்பு தன்மை, பக்க விளைவுகள் உள்ளிட்ட தகவல்களை தமிழ், மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட 6 இந்திய மொழிகளில் வழங்கி வருகிறோம். கொரோனா தடுப்பூசி தொடர்பான பல்வேறு சந்தேகங்களுக்கும் எங்கள் தளம் மூலம் விளக்கம் பெறவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.” என்று கூறியுள்ளது.
‘