பிளே ஸ்டோரிலிருந்து 5 அடாவடி கடன் அப்ளிகேஷன்களை தூக்கிய கூகுள்!

பிளே ஸ்டோரிலிருந்து 5 அடாவடி கடன் அப்ளிகேஷன்களை தூக்கிய கூகுள்!
பிளே ஸ்டோரிலிருந்து 5 அடாவடி கடன் அப்ளிகேஷன்களை தூக்கிய கூகுள்!
Published on

இன்றைய டிஜிட்டல் உலகில் மனிதனின் அனைத்து தேவைகளும் மிக சுலபமாக விரல் நுனியில் அடங்கிவிடுகிறது. சமயங்களில் அது சுகமாகவும், சில சமயங்களில் அது சங்கடமாகவும் கூட அமைகிறது. 

இந்தியாவில் வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் வாகன கடன், வீட்டு கடன், சொத்து மீதான கடன், தனி நபர் கடன் என வெவ்வேறு வகையான கடன்களை கொடுத்து வருகிறது. இருப்பினும் அந்த கடனை ஒருவர் பெறுவதற்கு சில தகுதிகளை அந்த நிறுவங்கள் கொண்டுள்ளன. அதை பூர்த்தி செய்பவர்களுக்கு மட்டுமே கடனும் கொடுக்கப்படுகிறது. 

இதிலிருந்து முற்றிலும் மாறுபட்டு டிஜிட்டல் முறையில் ஒருவரின் KYCயை மட்டும் அடிப்படையாக கொண்டு ஸ்மார்ட்போன் அப்ளிகேஷன்கள் மூலம் கடன் கொடுக்கும் அரசால் அங்கீகரிக்கப்படாத நிறுவனங்களும் உள்ளன. அண்மைய காலமாக அது மாதிரியான அப்ளிகேஷன்கள் கூகுள் பிளே ஸ்டோரில் உலாவிக்  கொண்டிருப்பதாகவும் சொல்லப்படுகிறது. அதன் மூலம் கடன் வாங்கியவர்களை அந்த அப்ளிகேஷன் நிறுவனங்கள் காட்டுகின்ற அடாவடி தர்ம சங்கடத்தில் ஆழ்த்தி வருவதாகவும் இணையத்தில் புகார்கள் பறக்கின்றன.  

“ஊரடங்கு சமயத்தில் தான் இது மாதிரியான அப்ளிகேஷன் மூலம் கடன் வழங்கும் நடைமுறை அதிகரித்துள்ளது. இந்த அப்ளிகேஷன்கள் இந்தியாவில் டிஜிட்டல் பரிவர்த்தணையில் கோலோச்சி வரும் நிறுவனங்களின் பெயரை போலவே கிட்டத்தட்ட இருப்பதால் மக்களும் அறியாமையினால் இதில் சிக்கி கொள்கிறார்கள். 4 லட்சம் முதல் 10 லட்சம் பேர் வரை இந்த அப்ளிகேஷன்களை டவுன்லோட் செய்து பயன்படுத்தியுள்ளனர்.

இந்த அப்ளிகேஷன்கள் குறித்து ஆராய்ந்த போது இவை அனைத்தும் ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டின் கீழ் இல்லை. சீன நிறுவனமான அலிபாபாவின் கீழ் இதன் சர்வர்கள் இயங்குகின்றன. கருப்பு பணத்தை வெள்ளையாக்கும் முயற்சியாக கூட இது நடந்திருக்கலாம்” என்கிறார் நிதி சார்ந்த தொழில்நுட்ப வல்லுனரான ஸ்ரீகாந்த். 

“பயனர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவது எங்களது முதன்மை கொள்கை. அதனால் நிதி சேவை சார்ந்த கொள்கைகளில் அதிக கவனம் செலுத்தி வருகிறோம். அதில் அத்து மீறுபவர்கள் மீது நடவடிக்கை நிச்சயமாக எடுக்கப்படும்” என கூகுள் தரப்பில் இதற்கு பதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது மாதிரியான அப்ப்ளிகேஷன்களில் கடன் வாங்கி பாதிக்கப்பட்டவர்கள் தொடர்பான செய்திகள் சமூக வலைத்தளங்களில் பகிரப்படுகின்றன. இனி வரும் காலங்களிலாவது கூகுள் நிறுவனம் தனது பிளே ஸ்டோர் கொள்கைகளை வலுப்படுத்தினால் அப்பாவி மக்கள் இதுமாதிரியான சிக்கல்களில் சிக்காமல் இருப்பார்கள் எனவும் நிதித்துறை வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். 

Ok Cash, Go Cash, Flip Cash, ECash, SnapItLoan என ஐந்து அப்ளிகேஷன்கள் இப்போது பிளே ஸ்டோரிலிருந்து கூகுள் நீக்கியுள்ளது.

நன்றி : TIMES OF INDIA 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com