வங்க மொழி எழுத்தாளரான மஹாஸ்வேதா தேவியின் பிறந்த தினத்தை கொண்டாடும் வகையில் கூகுள் முகப்பு வைக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் பழங்குடியின மக்களின் உரிமைக்காக பெரும் குரல் கொடுத்தவர் மஹாஸ்வேதா தேவி. 1926ஆம் ஆண்டு ஜனவரி 14ஆம் தேதி பிறந்த இவர், வங்கதேசத்தை சேர்ந்தவர். இவரது தாய் தந்தை இருவமே எழுத்தாளர்கள். எனவே சிறுவயது முதலே இவரும் எழுதுவதில் ஆர்வமுள்ளவராக வளர்ந்தார்.
இவர் நூற்றுக்கும் மேற்பட்ட நாவல்கள், பல சிறுகதைகளை எழுதியுள்ளார். இவற்றுக்காக இவருக்கு பத்ம வீபுஷண் விருது, பத்ம ஸ்ரீ, சார்க் இலக்கிய விருது, சாகத்திய அகாடமி விருது உள்ளிட்ட பல விருதுகள் வழங்கப்பட்டுள்ளன. இவர் கடந்த 2016ஆம் ஆண்டு மாரடைப்பு காரணமாக கொல்கத்தாவில் உயிரிழந்தார். இந்நிலையில் அவரது 92வது பிறந்த நாளை கொண்டாடும் வகையில் கூகுள் முகப்பு வைக்கப்பட்டுள்ளது.