"அவன் உயிரிழந்தது நல்லதுதான்" ரவுடி விகாஸ் துபேவின் தந்தை !

"அவன் உயிரிழந்தது நல்லதுதான்" ரவுடி விகாஸ் துபேவின் தந்தை !
"அவன் உயிரிழந்தது நல்லதுதான்" ரவுடி விகாஸ் துபேவின் தந்தை !
Published on

விகாஸ் துபே உயிரிழந்தது நல்லதுதான் என அவரின் தந்தை ராம்குமார் துபே தெரிவித்துள்ளார்.

கொலை, ஆள் கடத்தல் , நிலமோசடி உள்ளிட்ட 60க்கும் மேற்பட்ட வழக்குகளில் தொடர்புடைய ரவுடி விகாஸ் துபேவை கைது செய்ய உத்தரப்பிரதேச காவல்துறையினர் சென்றனர். இதனை முன்கூட்டியே அறிந்திருந்த துபே, காவல்துறை அதிகாரி உட்பட 8 காவலர்களை சுட்டுக்கொன்று தப்பியோடினார். நாடு முழுவதும் பெரிதும் பேசப்பட்ட இந்த சம்பவத்தில், மத்திய பிரதேசத்தில் தலைமறைவாக இருந்த விகாஸ் துபே, நேற்று கைது செய்யப்பட்டார்.

பின்னர் அவரை பலத்த பாதுகாப்புடன் அங்கிருந்து கான்பூருக்கு அழைத்து வந்தனர். அப்போது மழை பெய்ததால், விகாஸ் துபே இருந்த கார் விபத்துக்குள்ளானதாகவும், அதனைப் பயன்படுத்தி அவர் தப்ப முயன்றதாகவும் காவல்துறை தரப்பில் கூறப்படுகிறது. அப்போது நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் அவர் உயிரிழந்ததாக உத்தரப்பிரதேச காவல்துறையினர் தெரிவித்தனர்.

இதனையடுத்து அவரது உடல் கான்பூரில் உள்ள பைரவ்காட் மின் மயானத்தில் எரியூட்டப்பட்டது. இதில் விகாஸ் துபேவின் மனைவி, மகன் மற்றும் மைத்துனர் ஆகியோர் மட்டும் கலந்துகொண்டு இறுதிச் சடங்குகளைச் செய்தனர். மற்றபடி அவரின் தாய், தந்தை, தங்கை, தம்பி என யாரும் பங்கேற்கவில்லை.

தனது மகன் காவலர்களை சுட்டுக்கொன்ற தகவல் கேட்டு மிகவும் வேதனைப்பட்டதாக தெரிவித்த அவரது தாயார் சரளாதேவி, இதுபோன்ற நபர் சுட்டுக்கொல்லப்பட வேண்டும் என நினைத்ததாக கூறியுள்ளார். தனது மகனால் குடும்பத்தினர் அனைவரும் மிகவும் சிரமப்பட்டுள்ளதாக விகாஸ் துபேவின் தந்தை வேதனைப்பட தெரிவித்துள்ளார். மேலும், தனது மகன் இறந்தது நல்லதுதான் என்று கூறிய அவர் இதுபோன்ற கிரிமினல்களை போலீசார் விட்டுவைத்தால், நிர்வாகத்தை எப்படி நடத்துவது என்று கேள்வி எழுப்பினார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com