சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ 1,320 என அதிரடியாக சரிந்துள்ளது.இதன் விளைவாக ரூ.57,600 க்கு பவுன் தங்கம் விற்பனை ஆகிறது.
இந்தியாவில் கடந்த சில மாதங்களாகவே தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்து வந்தது. தொடர்ந்து, தங்கத்தின் மீதான மத்திய அரசின் பட்ஜெட்டில் தங்கத்தின் மீதான இறக்குமதி வரி குறைக்கப்பட்டதால் விலை மளமளவென சரிந்தது.
மேலும், விலை குறையும் என எதிர்பார்த்தவர்களுக்கு நினைத்து பார்க்க முடியாத அதிர்ச்சி காத்திருந்தது. அடுத்த சில மாதங்களிலேயே விலைப்படிப்படியாக உயர்ந்து செப்டம்பர் மாதம் ரூ 56 ஆயிரத்தையும், அதன்பின்னர் ஏற்ற இறக்கத்துடன் ரூ 57 ஆயிரத்தையே தொட்டுவிட்டது. இதன் மூலம் , தங்கத்தின் விலை வரலாறு காணாத உச்சத்தையே தொட்டது.
இந்தவகையில், சென்னையில் இன்று (நவம்பர் 7) 22 கேரட் ஆபரணத் தங்கம் பவுனுக்கு ரூ.1,320 என குறைந்துள்ளது.
இதனால், ஒரு பவுன் ரூ.57,600-க்கு விற்பனை ஆகிறது. தங்கம் கிராமுக்கு ரூ.165 குறைந்து ரூ.7,200-க்கு விற்பனையாகிறது. நேற்றைய தினம் பவுனுக்கு ரூ.80 என அதிகரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.மேலும், 24 கேரட் தங்கத்தின் விலையும் ஒரு கிராம் ரூ,8,040 க்கும் ஒரு சவரன் ரூ.64,320க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இதேப்போல, வெள்ளி விலை கிராமுக்கு ரூ.3 குறைந்துள்ளது..ஒரு கிராம் ரூ.102-க்கு விற்பனை ஆகிறது.
அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகளின் எதிரொலியால் கூட தங்கம் விலை சரிந்திருக்கலாம் என வணிக துறை சார்ந்த வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். இந்த மகிழ்ச்சியான செய்தி நீடிக்குமா? இல்லையா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.