சரிந்த தங்கம் விலை மீண்டும் ஏறாமல் இருக்க இதெல்லாம்தான் காரணமா? பங்குச்சந்தையின் இன்றைய நிலை எப்படி?

இன்று ஆபரணத் தங்கத்தின் விலை கிராமிற்கு 70 ரூபாய் குறைந்து ஒரு கிராம் 6400 க்கு விற்கப்படுகிறது. அதாவது சவரன் ரூபாய் 51,200 க்கு விற்கப்படுகிறது.
தங்கம் மற்றும் பங்கு சந்தை
தங்கம் மற்றும் பங்கு சந்தைபுதியதலைமுறை
Published on

இன்றைய தங்கத்தின் விலை:

இன்று ஆபரணத் தங்கத்தின் விலை கிராமிற்கு 70 ரூபாய் குறைந்து ஒரு கிராம் 6400 க்கு விற்கப்படுகிறது. அதாவது சவரன் ரூபாய் 51,200 க்கு விற்கப்படுகிறது. அதேபோல், தூய தங்கத்தின் விலையானது கிராமிற்கு 76 ரூபாய் குறைந்து 6982க்கு விற்பனையாகிறது. சவரன் 55,856க்கு விற்கப்படுகிறது.

வெள்ளியின் விலை கிராம் ரூ.3.50 குறைந்து கிராம் ஒன்று ரூ. 87.50க்கு விற்கப்படுகிறது.

தங்கம்
தங்கம்புதியதலைமுறை

ஆகஸ்ட்மாதம் தங்கத்தின் விலை

ஆகஸ்ட் மாத தொடக்கத்தில் 22 கேரட் தங்கத்தின் விலையானது ஒரு கிராம் 6430 ஆக இருந்தது ... இன்று 6400 ஆக உள்ளது. ஆக கடந்த ஒரு வாரமாக தங்கத்தின் விலை அதிகரிக்காமல் ஒரே நிலையில் இருப்பது தங்கநகை பிரியர்களுக்கு சற்று ஆறுதல் தரக்கூடிய செய்தி என்றாலும், இனி வரும் காலங்களில் தங்கம் ஏறுமுகமாக இருக்ககூடாது என்பது அவர்களின் எதிர்பார்பாகும்.

சாமானியர்களும் தங்கத்தில் முதலீடு செய்து வந்த நிலையில் கடந்த சில வருடங்களாக தங்கமானது வாங்கமுடியாத நிலைக்கு சென்றது மக்களுக்கு கவலை அளித்து வந்தது.

இந்நிலையில், தங்கத்தின் மீதான சுங்கவரி குறைப்பு, அமெரிக்க பொருளாதரத்தின் மந்தநிலை, சீனா போன்ற முக்கியநாடுகள் தங்கத்தின் மீதான முதலீட்டை குறைத்தது போன்ற பல காரணங்களாக தங்கமானது மீண்டும் மீண்டும் உயராமல் இருப்பது ஆறுதல் தரக்கூடிய ஒரு செய்தி.

தேசிய பங்கு சந்தை நிப்டி

நேற்று பயங்கர சரிவைக் கண்டிருந்த பங்கு சந்தையானது நிப்டி 24055.60 புள்ளிகள் முடிவடைந்திருந்த நிலையில், இன்று 24189.85 புள்ளிகளில் வர்த்தகமானது தொடங்கியது. மேலும், 170 புள்ளிகளில் நிலைக்கொண்டு 24233 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.

Share Market
Share Market

மும்பை பங்கு சந்தை சென்செக்ஸ்

அதேபோல், நேற்று 2,000 புள்ளிகள் சரிவைக்கண்டு பிறகு 78,759.40 புள்ளிகளில் முடிவடைந்த சென்செக்ஸ் இன்று, 78,982 புள்ளிகளில் வர்த்தகத்தை ஆரம்பித்து இருந்தது. தற்பொழுது 600 புள்ளிகள் அதிகரித்த நிலையில் 79,375 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.

Bank Nifty

நேற்று 1,500 புள்ளிகள் சரிவைக் கண்டிருந்த பேங்க் நிப்டியானது 50,092 புள்ளிகளில் முடிவடைந்து இருந்த நிலையில், இன்று 50,437 புள்ளிகளில் வர்த்தகத்தை ஆரம்பித்திருந்தது. மேலும், இன்றும் ஏற்ற இறக்கத்துடன் வர்த்தகமானது நடந்து வரும் நிலையில் 50,150 புள்ளிகளில் வர்த்தகம் நடந்து வருகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com