சென்னையில் ஒரே நாளில் தங்கம் விலையானது சவரனுக்கு ரூபாய் 400 அதிகரித்திருப்பது முதலீட்டாளர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
இன்றைய நிலவரப்படி தங்கமானது ஒரு கிராம் ரூ.50 அதிகரித்து ரூபாய் 6,710-க்கும், ஒரு சவரன் ரூபாய் 400 அதிகரித்து ரூ.53,680-க்கும் விற்கப்படுகிறது.
அமெரிக்காவின் பொருளாதார நிலையானது படிப்படியாக உயர்ந்துவரும் நிலையில், அந்நாட்டு அரசாங்கமானது கடன் மீதான வட்டி விகிதத்தின் அளவை குறைத்து வருகிறது. இதனால் முதலீட்டாளர்கள் தங்கத்தை வாங்கி குவித்து வருகின்றனர்.
இதனால் இந்தியாவில் தங்கத்தின் விலையானது படிப்படியாக உயர்ந்து இன்னும் சில ஆண்டுகளில் ஒரு கிராம் தங்கத்தின் விலையானது ரூபாய் 10,000 ரூபாயாக அதிகரித்திருந்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை.
ஏற்கெனவே இந்தியாவைவிட மேலை நாடுகளில் தங்கத்தின் விலையானது அதிகரித்து வரும் நிலையில், அதற்கு ஈடுகொடுப்பதைப்போல் இந்தியாவிலும் தங்கத்தின் விலையானதும் அதிகரிக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.