கோவாவில் விரைவில் பொது இடங்களில் மது அருந்த தடை விதிக்கப்படும் என அம்மாநில முதலமைச்சர் மனோகர் பரிக்கர் தெரிவித்துள்ளார்.
கோவா மாநிலம் பனாஜியில் தூய்மை இந்தியா திட்டம் தொடர்பான நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசி முதலமைச்சர் மனோகர் பாரிக்கர், பொதுமக்கள், குழந்தைகள் மற்றும் சுற்றுலா பயணிகளுக்கு பாதிப்பு ஏற்படுவதை தடுக்க பொது இடங்களில் மது அருந்த தடை விதிக்கப்படும் என தெரிவித்தார். அடுத்த மாதம் முதல் இந்த சட்டம் அமலுக்கு வரும் என்று கூறிய அவர், மக்கள் குடியிருப்பு பகுதிக்கு அருகில் மதுக்கடை வைத்திருப்போருக்கு அபராதம் விதிக்கப்படுவதுடன் கடுமையான தண்டணையும் வழங்கப்படும் என மனோகர் பரிக்கர் தெரிவித்தார். மேலும் இரண்டு சக்கர வாகன ஓட்டுநர்கள் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் இல்லையெனில் அவர்களுக்கு தக்க அபராதம் விதிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.