கோவாவில் ஆட்சியை கைப்பறுகிறதா காங்கிரஸ் ?

கோவாவில் ஆட்சியை கைப்பறுகிறதா காங்கிரஸ் ?
கோவாவில் ஆட்சியை கைப்பறுகிறதா காங்கிரஸ் ?
Published on

கோவாவில் கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. முதல்வர் மனோகர் பாரிக்கர் உடல்நலக்குறைவு காரணமாக , மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் கோவாவில் ஆட்சி அமைக்க உரிமை கோரி காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 14 எம்.எல்.ஏக்கள் ஆளுநர் மிருதுளா சிங்கை சந்தித்து கோரிக்கை வைக்க உள்ளனர். இது குறித்து பேசிய காங்கிரஸ் கட்சியில் மேலிடம் “நிலையான ஆட்சி அமைக்க காங்கிரஸ் தரப்பில் பேச்சுவார்த்தை மேற்கொள்ளப்பட்டு வருகிறது” என்றனர்.

காங்கிரஸ் கட்சியின் இந்த நடவடிக்கை எதிர்பார்க்கப்படாத ஒன்று என்றாலும் , பாஜக ஆட்சியில் எந்தவிதமான கூட்டணிப் பிளவோ அதிருப்தியோ இல்லாத நிலையில், விதிகளை வைத்தே விளையாடும் பாணி தொடருமோ என்ற அச்சம் எழுந்துள்ளது.  ஆளுநரைச் சந்திக்க சென்ற காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் “40 பேர் கொண்ட கோவா சட்டசபையில் காங்கிரஸ் கட்சி 16 இடங்களை வென்று தனிப்பெரும் கட்சியாக திகழ்கிறது, ஆட்சி அமைக்க இவை போதாத இடங்கள் என்றாலும் கூட, கூட்டணி அமைத்து காங்கிரசால் ஆட்சி அமைக்க முடியும், எனவே காங்கிரஸை ஆளுநர் ஆட்சி அமைக்க அழைக்க வேண்டும்” என்றனர்.

வேலை காரணமாக ஆளுநர் இல்லாததால், நாளைய தினம் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் சந்திக்க உள்ளனர். இது குறித்து பேசிய காங்கிரஸ் எம்.எல்.ஏ. காவேல்கர் “தனிப்பெரும் கட்சியான காங்கிரசுக்கு ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்காமால் முன்னர் வாய்ப்பு மறுக்கப்பட்டது, ஆனால் இப்போதைய ஆட்சி நிலையாக இல்லாமல் உள்ளது, அரசை கலைத்து விட்டு தேர்தலுக்கு கூட தயாராக பாஜக முடிவெடுத்துள்ளதாக தெரிகிறது. எங்களுக்கு பெரும்பான்மை உள்ள நிலையில் காங்கிரஸ் கட்சியை ஆளுநர் ஆட்சி அமைக்க அழைப்பது ஜனநாயகத்தை மீட்க கிடைத்த வாய்ப்பு” என்றார். 


கோவா சட்டமன்றத்தில் 40 இடங்கள் உள்ளன. இதில் 16 பேர் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள். பாஜகவுக்கு 14 இடங்கள். ஆட்சி அமைக்க 21 இடங்கள் தேவை என்று இருந்த நிலையில், காங்கிரஸ் கட்சியை முந்திக் கொண்டு பாஜக கூட்டணி அமைத்து ஆட்சி அமைத்தது. இந்நிலையில் கர்நாடகா சட்டமன்ற தேர்தலில் எடியூரப்பாவுக்கு அதிக இடங்களை பெற்றார் என்ற அடிப்படையில் ஆட்சி அமைக்க அழைத்த காரணத்தை பிடித்துக் கொண்டு காங்கிரஸ் இப்போது இது போன்ற முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. கர்நாடகாவுக்கு முன்னதாக பாஜக இதே பாணியை பின்பற்றி சில மாநிலங்களில் ஆட்சி அமைத்திருந்த நிலையில், காங்கிரசும் அதனை கையில் எடுத்தது. .

பாஜகவை பொருத்தவரை வெறும் 14 இடங்களை பெற்றிருந்த போதிலும் கூட, மனோகர் பாரிக்கரின் முயற்சியால் எதிர்கட்சிகளை ஒருங்கிணைத்து கூட்டணி அமைக்க முடிந்தது. அதோடு இப்போது வரை எந்தவித பிரச்னையும் இல்லாமல் ஆட்சி நடைபெற்று வருகிறது. இது குறித்து பேசிய அம்மாநில பாஜக தலைவர் “ குறைந்த இடங்கள் இருந்த போதிலும், ஆட்சி அமைக்க மற்ற கட்சிகள் இசைவு தெரிவிக்க காரணமாக இருந்த பாரிக்கரின் துணிச்சலே , அவர் இல்லாவிட்டால் வேறு யாராலும் செய்திருக்க முடியாது” என்றார்இதனை பயன்படுத்தவே காங்கிரஸ் முயல்கிறதா என்ற சந்தேகம் தற்போது எழுந்துள்ளது. ஆட்சி அமைக்க முயற்சித்தால் பாஜக கூட்டணியில் இருக்கும் சுயேட்சைகள் மற்றும் சரத் பவார் கட்சி எம்.எல்.ஏ.வை இழுக்க வேண்டும். காங்கிரஸ் முயற்சி கைகொடுக்குமா ?

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com