’குழந்தை பிறந்ததும் தந்தைகளுக்கும் விடுப்பு வழங்குக’-மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா

’குழந்தை பிறந்ததும் தந்தைகளுக்கும் விடுப்பு வழங்குக’-மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா
’குழந்தை பிறந்ததும் தந்தைகளுக்கும் விடுப்பு வழங்குக’-மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா
Published on

குழந்தை பிறந்ததும் தந்தைகளுக்கும் விடுப்பு வழங்க விமான நிறுவனங்கள் பரிசீலிக்க வேண்டுமென விமானப் போக்குவரத்து அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா தெரிவித்தார்.

மத்திய விமானப் போக்குவரத்து அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா ”விமான நிறுவனங்களில் பணிபுரியும் ஆண் ஊழியர்களுக்கு தந்தைவழி விடுப்பு வழங்குவது குறித்து விமான நிறுவனங்கள் பரிசீலிக்க வேண்டும். இதனால் அவர்களும் பொறுப்புகளை பகிர்ந்து கொள்ளலாம்” என்று தெரிவித்தார். "குழந்தைகளை வீட்டில் வளர்க்கும் பொறுப்பில் ஆண்களும் பங்கேற்க வேண்டும். விமான நிறுவனங்கள் பெண்களுக்கு ஆரோக்கியமான பணியிட சூழலை உருவாக்குவதில் தீவிரம் காட்டுகின்றன. மகப்பேறு விடுப்பு மற்றும் பிற கட்டமைப்புகள் போன்றவற்றின் அடிப்படையில் மிகப்பெரிய வேலையைச் செய்கின்றன. நாம் அதைத் தாண்டி செல்ல வேண்டும் என்று நினைக்கிறேன்,” என்று சிந்தியா கூறினார்.

“பாலினம் பேதமின்றி, குடும்பச் சூழலைப் பொறுத்தவரை ஆண்களுக்கும் பெண்களுக்கும் சமமான பொறுப்பைக் காட்டும் சூழலை நாம் உருவாக்க வேண்டும். மகப்பேறு விடுப்பு என்ற கருத்தை நாம் ஏன் பார்க்கிறோம் என்பது ஒரு உதாரணம். வீட்டில் குழந்தைகளை வளர்க்கும் பொறுப்பில் ஆண்களும் பங்கு கொள்ள வேண்டிய தந்தைவழி விடுப்பு என்ற கருத்தையும் நாம் பார்க்க வேண்டும்,” என்று சிந்தியா கூறினார்.

ஊதியத்துடன் கூடிய மகப்பேறு விடுப்பை வழங்கினாலும், அவற்றில் பெரும்பாலானவை ஆண்களுக்கு ஒரே மாதிரியான கொள்கை இல்லை. எனவே, அந்த மன மாற்றம் நிகழ வேண்டும், ஆண்களுக்கும் தந்தைவழி விடுப்பை அளிப்பது பற்றி விமான நிறுவனங்கள் பரீசிலிக்க வேண்டும் என சிந்தியா கூறினார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com