கேரளாவில் சாலைகளில் பலூன் விற்றுக்கொண்டிருந்த பெண்ணொருவரை, புகைப்படங்களுக்கான மாடலாக மாற்றியுள்ளார் அர்ஜூன் கிருஷ்ணன் என்ற புகைப்படக் கலைஞர். இந்த புகைப்படம், இணையத்தில் வைரலாகிவருகின்றது.
கிஸ்பு என்ற அந்தப் பெண்ணின் இருவேறு புகைப்படங்களை கொலேஜ் செய்து பதிவிட்டிருக்கும் புகைப்படக்கலைஞர் அர்ஜூன், அதில் ``அந்தலூரின் தெருக்களிலிருந்து இப்போது மக்களின் மனதுக்குள் செல்லும் பெண்! மாடலுக்கு செய்யப்படும் மேக்-ஓவருக்குப் பின், அவர் முகத்தில் தெரியும் அந்த மகிழ்ச்சியை பாருங்கள்” என்று குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக இரவு நேரமொன்றில், சாலையோரத்தில் பலூன் விற்பனை செய்துகொண்டிருந்த கிஸ்புவை, அவர் வைத்திருந்த வண்ண ஒளிகளுடன் மிளிர்ந்த பலூனுடன் புகைப்படமெடுத்திருந்திருக்கிறார் அர்ஜூன். அந்தப் புகைப்படத்துக்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து, தனியாக அப்பெண்ணுக்கென ஃபோட்டோஷூட் திட்டமிட்டு அதை பதிவு செய்திருக்கிறார் அர்ஜூன்.
இதேபோல சில வாரங்களுக்கு முன்பு வெண்ணைகாடு பகுதியைச் சேர்ந்த மம்மிக்கா என்ற தினக்கூலித் தொழிலாளியின் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைராலனது. தினமும் லுங்கி மற்றும் சட்டையில் வலம் வந்த அவரை, கோட்டு சூட்டுடன் புகைப்படம் எடுத்து வெளியிட்டு அனைவரையும் வெகுவாகக் கவர்ந்திருந்தனர் அக்குழுவினர். சமீபகாலமாகவே சாமாணியர்களை மாடல்கள் போல புகைப்படம் எடுத்து வெளியிடுவது ட்ரெண்டாகி வருகின்றது.
சமீபத்திய செய்தி: தருமபுரியில் 3 ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த வட்டக்கல் கண்டுபிடிப்பு