ரூ.10 ஆயிரம் கடனுக்காக இரண்டரை வயது சிறுமியை கொன்று கண்ணை எடுத்த கொடூரர்கள் உத்தரப் பிரதேசத்தில் கைது செய்யப்பட்டனர்.
உத்தரப் பிரதேச மாநிலம் தப்பால் பகுதியில் ஒரு தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு இரண்டரை வயதில் ஒரு மகள் இருந்தார். இத்தம்பதியினர் தங்கள் வீட்டின் அருகே வசிக்கும் ஷாகித் மற்றும் அஸ்லாம் என்பவர்களிடம் ரூ.10 ஆயிரம் கடன் வாங்கியுள்ளனர். இந்தப் பணத்தை திரும்பக் கொடுக்க தமாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் கடந்த மாதம் கடன் கொடுத்த இருவருக்கும், அந்தத் தம்பதியினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
பின்னர் கடந்த மே 31ஆம் தேதி அந்தத் தம்பதியினர் இரண்டரை வயது குழந்தை காணாமல் போனது. அதுதொடர்பாக பெற்றோர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். மூன்று நாட்களாக குழந்தையை தேடிய போலீஸார், கடந்த ஜூன் 2ஆம் தேதி மோப்ப நாயின் உதவியோடு ஆய்வு செய்தனர். அப்போது ஷாகித் மற்று அஸ்லாம் ஆகியோரின் வீட்டிற்கு அருகே மோப்ப நாய்கள் வட்டமிட்டுள்ளன. அந்த இடத்தில் தோண்டிய காவல்துறையினர், சிதைந்த நிலையில் குழந்தையின் உடலை மீட்டனர். குழந்தையின் கண்கள் இரண்டும் தோண்டி எடுக்கப்பட்டிருந்தது பிரதே பரிசோதனையில் தெரிய வந்திருந்தது.
இதையடுத்து ஷாகித் மற்றும் அஸ்லாம் இருவரும் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வந்தனர். இந்நிலையில் இருவரும் தாங்கள் தான் குழந்தையைக் கொன்றதை ஒப்புக்கொண்டனர். ரூ.10 ஆயிரம் கடனுக்காகவும், பணம் கேட்கும் போது ஏற்பட்ட வாதத்தினாலும் குழந்தையைக் கொன்று கண்களை தோண்டி எடுத்ததாக அவர்கள் வாக்குமூலம் அளித்துள்ளனர். ஆனால் அந்த குழந்தை பாலியல் வன்கொடுமை செய்யப்படவில்லை.