ஆந்திர மாநிலம் அன்னமய்யா மாவட்டம் ராஜம்பேட்டையைச் சேர்ந்த சாய்குமார், தனது குடும்பத்தினருடன் சித்தூர் செல்வதற்காக ராஜம்பேட்டையில் இருந்து தாதர் எக்ஸ்பிரஸ் ரயிலில் ரேணிகுண்டா வந்துள்ளார். இதையடுத்து சாய் குமாரின் குடும்பத்தினர் சித்தூர் செல்லும் ரயிலுக்காக ரேணிகுண்டா ரயில் நிலைய 3வது பிளாட்பாரமில் காத்திருந்தனர்.
ஆப்போது அவரது 4 வயது மகள் அங்கு விளையாடிக் கொண்டே பிளாட்பாரத்தில் உள்ள இரும்பு தூணில் தலையை விட்டள்ளார். அதில் அவரது தலை இரும்புத் தூண் இடையே மாட்டிக் கொண்டதால் அவர் அலறித் துடித்துள்ளார். இதையடுத்து பெற்றோர் மற்றும் பயணிகள், சிறுமியின் தலையை வெளியே இழுக்க முயன்றனர். ஆனால், எவ்வளவோ முயற்சி செய்தும் முடியாததால் ரயில்வே அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்துள்ளனர்.
இதனையடுத்து ரயில்வே அதிகாரிகள் இரும்பு கட்டர் கொண்டு வந்து இரும்புத் தூணை கட் செய்து குழந்தையை பத்திரமாக மீட்டனர். ரயில்வே ஊழியர்கள் குழந்தையை பத்திரமாக மீட்டதால் அங்கிருந்தவர்கள் நிம்மதியடைந்தனர்.
குழந்தைகள் வைத்திருக்கும் பெற்றோர்கள் எங்கிருந்தாலும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். குழந்தைகள் ஒரு இடத்தில் இருக்க மாட்டார்கள் சில நிமிடத்தில் விபத்தில் சிக்க நேரிடும் என்பதால் எச்சரிக்கையாக் இருக்க வேண்டும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.