ஓடையில் சேற்றை கழுவச் சென்ற 1ம் வகுப்பு படிக்கும் சிறுமிக்கு நேர்ந்த பரிதாபம்!

ஓடையில் சேற்றை கழுவச் சென்ற 1ம் வகுப்பு படிக்கும் சிறுமிக்கு நேர்ந்த பரிதாபம்!
ஓடையில் சேற்றை கழுவச் சென்ற 1ம் வகுப்பு படிக்கும் சிறுமிக்கு நேர்ந்த பரிதாபம்!
Published on

சிக்மகளூரில் பெய்துவரும் கனமழையால் வெள்ள நீரில் 1ம் வகுப்பு படிக்கும் சிறுமி அடித்துச் செல்லப்பட்டிருக்கிறார்.

கர்நாடகா மாநிலம் சிக்மகளூரு பகுதியில் கடந்த சில நாட்களாக தொடர் மலை பெய்து வருகிறது. தொடர் மழை காரணமாக அந்த பகுதியில் நதிகள் ஓடை கால்வாய்களில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.

இந்த நிலையில் சிக்மகளூர் தாலுகாவில் உள்ள ஹோஸ்பேட் கிராமத்தில், கால்கள் சேறும் சகதியுமாக இருந்ததால், கால் கழுவ ஓடையில் இறங்கிய 1ம் வகுப்பு சிறுமி, வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு இறந்த சம்பவம் நடந்துள்ளது. அந்த சிறுமி சுப்ரிதா (6) என அடையாளம் காணப்பட்டுள்ளது.

சுப்ரிதா தனது மூத்த சகோதரனுடன் பள்ளியிலிருந்து வீட்டிற்கு வந்து கொண்டிருந்தபோது, அவரது கால்களில் சேறு படிந்ததால், அவரது அண்ணன் மற்றும் சகோதரி இருவரும் கிராமத்தின் அருகே உள்ள ஓடையில் கால்களைக் கழுவச் சென்றனர். அப்போது சுப்ரிதா தண்ணீரில் அடித்து செல்லப்பட்டார்.

கடந்த ஒரு வாரமாக பள்ளிக்கு செல்லாத சிறுமி இன்று பள்ளிக்கு சென்றுள்ளார். ஆனால், மாலை பள்ளியிலிருந்து வீட்டுக்கு திரும்பியபோது இந்த சம்பவம் நடந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

இதுகுறித்து தகவல் அறிந்த அப்பகுதி மக்கள், சிறுமியை கண்டுபிடிக்க முயன்றனர். எனினும் சிறுமியை காணவில்லை. தீயணைப்பு வீரர்கள் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டனர். அதிகாரிகள் அப்பகுதி மக்களுடன் சேர்ந்து ஓடும் ஓடையில் சிறுமியை கண்டுபிடிக்க முயன்றனர். எனினும் சிறுமியை கண்டு பிடிக்க முடியாமல் தீயணைப்பு துறையினர் தினறி வருகிறார்கள். இந்த சம்பவம், சுப்ரிதாவின் கிராம பகுதியினரை அதிர்ச்சிக்கும் பரபரப்புக்கும் ஆளாக்கியுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com