"ஏன் இவ்வளவு சுமை பிரதமரே?" - மழலை மாறாமல் கேட்ட குழந்தைக்கு பதிலளித்த துணைநிலை ஆளுநர்

"ஏன் இவ்வளவு சுமை பிரதமரே?" - மழலை மாறாமல் கேட்ட குழந்தைக்கு பதிலளித்த துணைநிலை ஆளுநர்
"ஏன் இவ்வளவு சுமை பிரதமரே?" - மழலை மாறாமல் கேட்ட குழந்தைக்கு பதிலளித்த துணைநிலை ஆளுநர்
Published on

ஜம்மு காஷ்மீரில், ஆறு வயது குழந்தை ஒருவர் பிரதமர் மோடியிடம் “ஏன் குழந்தைகள் மீது இவ்வளவு சுமைகள் வைக்கப்படுகின்றன?" என குற்றச்சாட்டு ஒன்றை வைத்திருந்தார். இதைத்தொடர்ந்து, ஜம்மு காஷ்மீரின் துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா, ‘அடுத்த 48 மணி நேரத்துக்குள், குழந்தைகளின் சுமையை குறைக்கும் வகையில் அவர்களின் வீட்டுப்பாட பணிகளை குறைக்கும் நோக்கத்தை மாநில பள்ளிக் கல்வித்துறை அறிவிக்க வேண்டும்’ என்ற உத்தரவை பிறப்பித்துள்ளார்.

சிறுமி இதுதொடர்பாக, வீடியோவொன்றில் பேசியிருந்தார். அதில், ஆன்லைன் வகுப்புகள் அனைத்தும் காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை தொடர்ச்சியாக இருப்பதாக கூறியிருந்தார். “சிறு குழந்தைகளான எங்கள் மீது ஏன் இவ்வளவு படிப்பு சுமை வைக்கப்படுகிறது மோடி சார்? எங்களைவிட பெரியவர்களான 6ம் வகுப்பு – 7ம் வகுப்பு குழந்தைகளுக்கு வேண்டுமானால் கூடுதல் வேலை தரலாமே” என மழலை மாறாமல் கூறியுள்ளார்.

இதைத்தொடர்ந்து, அம்மாநில துணை ஆளுநர் ட்வீட் செய்துள்ளார். அதில், “குழந்தைப்பருவமென்பது, கடவுளின்  ஆசிர்வாதம். அது மகிழ்ச்சியுடனும், நிம்மதியுடனும் அமைய வேண்டும்” என்று கூறியுள்ளார். அதைத்தொடர்ந்தே, மேற்சொன்ன அறிவிப்பை அவர் வெளியிட்டுள்ளார்.

குழந்தையின் இந்த வீடியோ, பலரின் பாராட்டையும் அன்பையும் பெற்றுள்ளது. ஜூன் 15ம் தேதிவரை, அங்கு பள்ளிகள் மூடப்பட்டிருக்கும் நிலையில், ஆன்லைன் கல்வி மிகப்பெரிய சர்ச்சையாகியுள்ளது.

Very adorable complaint. Have directed the school education department to come out with a policy within 48 hours to lighten burden of homework on school kids. Childhood innocence is gift of God and their days should be lively, full of joy and bliss. https://t.co/8H6rWEGlDa

ஜூன் 15ம் தேதிவரை, அங்கு பள்ளிகள் மூடப்பட்டிருக்கும் நிலையில், ஆன்லைன் கல்வி மட்டுமே சாத்தியமாக இருக்கிறது. அதுவும் இப்போது குழந்தைகளுக்கு சுமையாகி மிகப்பெரிய சர்ச்சையாகியுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com