நாட்டுக்கு மதிப்புமிக்க பங்களிப்பை செய்தவர்: பெர்னாண்டஸ் மறைவுக்கு பிரதமர் இரங்கல்!

நாட்டுக்கு மதிப்புமிக்க பங்களிப்பை செய்தவர்: பெர்னாண்டஸ் மறைவுக்கு பிரதமர் இரங்கல்!
நாட்டுக்கு மதிப்புமிக்க பங்களிப்பை செய்தவர்: பெர்னாண்டஸ் மறைவுக்கு பிரதமர் இரங்கல்!
Published on

முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் ஜார்ஜ் பெர்னாண்டஸ் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது பாதுகாப்புத் துறை அமைச்சராக இருந்தவர் ஜார்ஜ் பெர்னாண்டஸ். உடல்நலக் குறைவு காரணமாக டெல்லியில் இன்று காலமானார். அவருக்கு வயது 88. ஜார்ஜ் பெர்னாண்டஸ் மறைவுக்கு பல அரசியல் கட்சித் தலைவர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 

பிரதமர் மோடி தெரிவித்துள்ள இரங்கல் செய்தியில், ‘’இந்தியாவின் சிறந்த அரசியல் தலைமையை வெளிப்படுத்தியவர் ஜார்ஜ் பெர்னாண்டஸ். அச்சமின்றி, வெளிப்படையாக கருத்துகளை வெளிபடுத்துபவர்.

தொலைநோக்கு சிந்தனையுடன் நாட்டுக்கு மதிப்புமிக்க பங்களிப்பை செய்திருக்கிறார். ஏழைகளின் உரிமைக்கான குரலாக விளங்கியவர். நீதிக்காக போராடிய தொழிலாளர்களின் தீவிரமான தலைவராக அவர் நினைவில் நிற்கிறார்.

பாதுகாப்பு அமைச்சராக இருந்து இந்தியாவை வலிமையானதாகவும் பாதுகாப்பானதாகவும் மாற்றியவர். நீண்டகால தனது பொதுவாழ்வில் ஒரு போதும் தனது கொள்கைகளில் இருந்து பின்வாங்காதவர். எமர்ஜென்சியின் பல்லையில் நகத்தையும் பிடுங்கியவர். அவரது எளிமையும் மனிதாபிமானமும் குறிப்பிடத்தக்க ஒன்று. அவரது ஆன்மா சாந்தியடையட்டும்’’ என்று தெரிவித்துள்ளார். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com