கடந்த சில வருடங்களாக ஹூரன் இந்தியா நிறுவனம், இந்திய பணக்காரர்கள் குறித்த பட்டியலை வெளியிட்டு வருகிறது. இந்த வரிசையில் ஹூரன் வெளியிட்டுள்ள 2024ஆம் ஆண்டு பணக்காரர்கள் பட்டியலில் இதுநாள் வரை முதலிடத்தில் இருந்துவந்த முகேஷ் அம்பானி மற்றும் அவரது குடும்பத்தை 2ஆம் இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளது.
கவுதம் அதானி மற்றும் அவரது குடும்பம் ரூ.11.6 லட்சம் கோடி சொத்து மதிப்புடன் முதல் இடத்தை பிடித்துள்ளனர். முகேஷ் அம்பானி மற்றும் அவரது குடும்பம், ரூ.10.14 கோடி சொத்து மதிப்புடன் இரண்டாவது இடத்தையும், ஹெச்.சி.எல் நிறுவனத்தின் சிவ் நாடார் மற்றும் அவரது குடும்பம் ரூ.3.14 கோடி சொத்துகளுடன் 3வது இடத்தைப் பிடித்துள்ளது.
நான்காவது மற்றும் ஐந்தாவது இடங்களில் சைரஸ் எஸ் பூனவல்லா மற்றும் சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா (எஸ்ஐஐ) குடும்பம் (ரூ. 2.89 லட்சம் கோடி) மற்றும் சன் பார்மாசூட்டிகல் இண்டஸ்ட்ரீஸின் திலீப் ஷங்வி (ரூ. 2.49 கோடி) ஆகியோர் உள்ளனர்.
கடந்த ஐந்து ஆண்டுகளாக, கௌதம் அதானி, முகேஷ் அம்பானி, சிவ் நாடார், சைரஸ் எஸ்.பூனாவாலா, கோபிசந்த் ஹிந்துஜா, ராதாகிருஷ்ணன் தாமணி ஆகியோர் தொடர்ந்து டாப் 10 பட்டியலில் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றனர் என ஹூரன் தெரிவித்துள்ளது. மேலும், 2024 ஹூரன் இந்தியா பணக்காரர் பட்டியலில் இளம் பில்லியனராக 21 வயதான ஜெப்டோ நிறுவனத்தின் கைவல்ய வோரா இணைந்துள்ளார்.