அமேசானை பின்னுக்கு தள்ளி 2 ஆம் இடத்தை பிடித்த அதானி - முதல் இடம் பிடிப்பாரா?

அமேசானை பின்னுக்கு தள்ளி 2 ஆம் இடத்தை பிடித்த அதானி - முதல் இடம் பிடிப்பாரா?
அமேசானை பின்னுக்கு தள்ளி 2 ஆம் இடத்தை பிடித்த அதானி  - முதல் இடம் பிடிப்பாரா?
Published on

உலகப் பணக்காரர்கள் பட்டியலில் அமேசான் நிறுவனரை பின்னுக்குத்தள்ளி இரண்டாவது இடத்திற்கு முன்னேறியுள்ளார் கவுதம் அதானி.

சமீப காலமாகவே அதானி குழுமத் தலைவரும், இந்தியாவின் முன்னணி தொழிலதிபருமான கவுதம் அதானியின் சொத்து மதிப்பானது மிக வேகமாக உயர்ந்து வருகின்றது. இதனால் உலக பணக்காரர்கள் பட்டியலில் கவுதம் அதானி வேகமாக முன்னேறி வருகிறார். இச்சூழலில் புளூம்பெர்க் பில்லியனர்ஸ் சனிக்கிழமை வெளியிட்ட தரவுகளின்படி உலகப் பணக்காரர் பட்டியலில் மூன்றாவது இடத்தில் இருந்த அதானி தற்போது இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளார்.

இதற்கு முன் உலகப் பணக்காரர்கள் பட்டியலில் எலான் மஸ்க் முதல் இடத்திலும், அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸ் இரண்டாவது இடத்திலும், மூன்றாவது இடத்தில் அதானியும் இருந்தனர். தற்போது புளூம்பெர்க் பில்லியனர்ஸ் வெளியிட்டிருக்கும் பணக்காரர் பட்டியலின்படி, அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸை பின்னுக்குத்தள்ளி கவுதம் அதானி உலகின் இரண்டாவது பணக்காரர் ஆகியிருக்கிறார். அதானியின் மொத்த சொத்து மதிப்பு சுமார் 264 பில்லியன் அமெரிக்க டாலர்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது. அதானி குழுமத்தின் பங்குகள் ஏற்றம் பெற்றுள்ளதே இதற்கு காரணம் எனத் தெரிகிறது. உலகின் இரண்டாவது பெரிய பணக்காரரான இந்தியாவின் கவுதம் அதானி விரைவில் முதலிடத்திற்கு முன்னேறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

உலக பணக்காரர்கள் பட்டியலில் முதல் இடத்தில் இருக்கும் எலான் மஸ்கின் சொத்து மதிப்பு இப்போது 273.2 பில்லியன் டாலர்கள் ஆகவும், பெர்னார்ட் அர்னால்ட் (154.7 பில்லியன் டாலர்கள்) மற்றும் ஜெஃப் பெசோஸ் (146.9 பில்லியன் டாலர்கள்) முறையே மூன்று மற்றும் நான்காவது இடத்தில் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க: ‘உக்ரைனிலிருந்து திரும்பிய மாணவர்கள் இங்கு கல்வியை தொடர முடியாது’- மத்திய அரசு தகவல்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com