பாஜக கூட்டணி | சறுக்கல் எங்கே, சாதனை எங்கே? 2019 vs 2024 ஓர் ஓப்பீடு!

கடந்த 2019ஆம் ஆண்டு தேர்தலுடன் ஒப்பிடுகையில் இந்த தேர்தலில் பாஜக கூட்டணி சில இடங்களில் சறுக்கல்களையும், சில இடங்களில் ஏற்றங்களையும் கண்டுள்ளது. அந்த சறுக்கல்கள் என்ன? ஏற்றங்கள் என்ன காணலாம்..
மோடி
மோடிட்விட்டர்
Published on

2024-ல் தனிப்பெரும்பான்மை இல்லை!

2019-ல் நடந்த மக்களவைத் தேர்தலில் பாரதிய ஜனதா தனித்து 303 தொகுதிகளிலும், கூட்டணியாக 352 தொகுதிகளிலும் வெற்றி பெற்று அசுர பலத்துடன் ஆட்சி அமைத்தது. ஆனால், இம்முறை அந்த எண்ணிக்கையில் பெரும் மாற்றம் ஏற்பட்டிருக்கிறது.

பாரதிய ஜனதா தனித்து 240 தொகுதிகளில் மட்டுமே வெற்றியை பெற்றுள்ளது. 272 என்ற மேஜிக் எண்ணையும் தொட முடியாமல் தனிப்பெரும்பான்மையையும் இழந்துள்ளது. அதே சமயம் கூட்டணி கட்சிகளின் பலத்துடன் ஆட்சியை தக்க வைத்துக் கொண்டிருக்கிறது பாஜக.

மோடி
மோடி

2024-ல் வடக்கில் சறுக்கல்!

2019ஆம் ஆண்டில் 190 தொகுதிகளில் பாஜகவுடன் நேருக்கு நேர் மோதிய காங்கிரஸ் கட்சி, 15 இடங்களில் மட்டுமே வென்றிருந்தது. இந்த முறை 214 தொகுதிகளில் நேருக்கு நேர் மோதிய காங்கிரஸ் கட்சி 61 தொகுதிகளில் வெற்றி பெற்று இருக்கிறது.

மோடி
நாட்டையே திரும்பி பார்க்க வைத்த உ.பி தேர்தல் முடிவுகள்; கோட்டைவிட்ட பாஜக! உற்சாகத்தில் காங். கூட்டணி

வடகிழக்கு மாநிலங்களிலும் பாஜகவுக்கு சறுக்கல் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக மணிப்பூரில் போட்டியிட்ட 2 இடங்களிலும் பாஜக தோல்வியடைந்துள்ளது. நாகாலாந்து மற்றும் மேகாலயாவில் தலா ஒரு தொகுதியில் மட்டுமே வெற்றி அடைந்திருக்கிறது.

ராகுல், மோடி
ராகுல், மோடிஎக்ஸ் தளம்

சாதித்தது எங்கே?

அதேசமயம், அசாமில் வெற்றியை விட்டுக் கொடுக்காமல், மீண்டும் 9 தொகுதிகளை பாஜக கூட்டணி கைப்பற்றி இருக்கிறது.

மோடி
”சந்தேகமே இல்லாமல் 300+ இடங்களில் பாஜக வெல்லும்”- ஆருடம் சொன்ன பிரசாந்த் கிஷோரை தேடும் நெட்டிசன்கள்!

கடந்த தேர்தலை போல அருணாச்சலப் பிரதேசம், திரிபுரா மாநிலங்களிலும் தலா 2 தொகுதிகளை கைப்பற்றி, வெற்றியை தக்கவைத்துக் கொண்டிருக்கிறது பாஜக.

சரிவு எங்கே?

பாஜக கூட்டணி
பாஜக கூட்டணிமுகநூல்

கடந்த தேர்தலில் பட்டியலின, பழங்குடியினருக்கான 131 தொகுதிகளில் 77 இடங்களை பாஜக கைப்பற்றியிருந்தது. காங்கிரஸ் 11 இடங்களை மட்டுமே பெற்றிருந்தது. இந்நிலையில் இந்த முறை பாஜக-வின் இடங்கள் 53ஆக சரிந்துள்ளது. காங்கிரஸ் 33 தொகுதிகளில் வென்றுள்ளது.

ஒடிசாவில் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலிலும் பாஜக இம்முறை ஏற்றம் கண்டுள்ளது. அங்கு 24 ஆண்டு கால நவீன் பட்நாயக்கின் ஆட்சியை வீழ்த்தி, முதன்முறையாக தாமரையை மலரச் செய்திருக்கிறது பாஜக.

மோடி
ஒடிசா | நவீன் பட்நாயக்கின் 24 ஆண்டுகால கோட்டையை பாஜக தகர்த்தது எப்படி?

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com