முன்னாள் சபாநாயகர் மகன் கடையிலிருந்து ஆந்திர சட்டப்பேரவை ஃபர்னிச்சர்கள் மீட்பு

முன்னாள் சபாநாயகர் மகன் கடையிலிருந்து ஆந்திர சட்டப்பேரவை ஃபர்னிச்சர்கள் மீட்பு
முன்னாள் சபாநாயகர் மகன் கடையிலிருந்து ஆந்திர சட்டப்பேரவை ஃபர்னிச்சர்கள் மீட்பு
Published on

ஆந்திர சட்டப்பேரவையின் மரச்சாமான்கள் உள்ளிட்ட பொருட்கள், சட்டப்பேரவையின் முன்னான் சபாநாயகர் மகனுக்கு சொந்தமான ஷோ ரூமில் இருந்து மீட்கப்பட்டது.

ஆந்திரப்பிரதேச முன்னாள் சபாநாயகர் கோடேலா சிவ பிரசாத் ராவ். இவரது மகன் சிவராம கிருஷ்ணாவுக்கு சொந்தமான ஷோ ரூம் ஒன்று குண்டூரில் உள்ளது. இந்த ஷோ ரூமில், ஆந்திரப் பிரதேச சட்டப்பேரவைக்கு சொந்தமான மேஜை, நாற்காலி உள்ளிட்ட மரச்சாமான்கள் இருப்பதை சட்டப்பேரவை அலுலவர்கள் கடந்த மூன்று தினங்களுக்கு முன் கண்டுள்ளனர்.

இதனையடுத்து இதுகுறித்து போலீசாரிடம் புகார் அளிக்கப்பட்டது. அதன் பேரில் ராவ் மற்றும் அவரது மகன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதனையடுத்து ஷோ ரூமில் இருந்து, சட்டப்பேரவையின் மரச்சாமான்களை போலீசார் மற்றும் பேரவை அலுலவர்கள் மீட்டள்ளனர். மொத்தமாக 70 பொருட்கள் மீட்கப்பட்தாக தெரிகிறது.

முன்னதாக சட்டப்பேரவை உபகரணங்கள் மற்றும் மரச்சாமான்களை கடந்த 2016-ஆம் ஆண்டு ஹைதராபாத்தில் இருந்து அமராவதிக்கு மாற்றும்போது சில பொருட்களை தங்களது வீடு மற்றும் அலுவலகத்திற்கு கொண்டு சென்றதாக ராவ் சமீபத்தில் ஒப்புக்கொண்டிருந்தனார். தற்காலிக சட்டப்பேரவை கட்டடத்தில் பொருட்கள் சேதமாகிவிடக் கூடாது என்பதற்காகத் தான் தங்களது வீடுகளுக்கு பொருட்கள் எடுத்துச் செல்லப்பட்டதாகவும் அவர் கூறினார்.

இதனிடையே தனது அலுவலத்தில் இருந்து சட்டப்பேரவை பொருட்களை எடுத்துச் செல்ல நடவடிக்கை எடுக்க அரசுக்கு உத்தரவிடுமாறு ராவ் உயர்நீதிமன்றத்தை நாடியிருந்தார். அதில் இதுதொடர்பாக சட்டப்ரேவை அதிகாரிகளுக்கு கடிதம் எழுதியதாவும், ஆனால் இதுவரை அந்த விவகாரத்தில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனத் தெரிவித்திருந்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com