டெல்லியில் 17ஆம் தேதி வரை முழு ஊரடங்கு நீட்டிப்பு: அரவிந்த் கெஜ்ரிவால்

டெல்லியில் 17ஆம் தேதி வரை முழு ஊரடங்கு நீட்டிப்பு: அரவிந்த் கெஜ்ரிவால்
டெல்லியில் 17ஆம் தேதி வரை முழு ஊரடங்கு நீட்டிப்பு: அரவிந்த் கெஜ்ரிவால்
Published on

டெல்லியில் முழு ஊரடங்கு வரும் 17ஆம் தேதி வரை நீ்ட்டிக்கப்படுவதாக முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார்.

தற்போது அமலில் உள்ள ஊரடங்கை, மருத்துவ உள்கட்டமைப்பை மேம்படுத்தவும், பல்வேறு இடங்களில் ஆக்சிஜன் மற்றும் படுக்கை வசதிகளை அதிகரிக்கவும் பயன்படுத்திக் கொண்டதாக அரவிந்த் கெஜ்ரிவால் கூறியிருக்கிறார். டெல்லியில் ஆக்சிஜன் நிலைமை மேம்பட்டுள்ளதாக குறிப்பிட்ட அவர், அச்சத்தை ஏற்படுத்தும் அழைப்புகள் மருத்துவமனைகளிலிருந்து தற்போது வருவதில்லை எனவும் தெரிவித்தார்.

இந்த ஊரடங்கு காலக்கட்டத்தில் தடுப்பூசி போடும் பணியை தொடங்கிவிட்டதாகவும், இதற்கென பள்ளிகளில் சிறப்பான ஏற்பாடுகளை செய்திருப்பதாகவும் தெரிவித்தார். தடுப்பூசி போட்டுக்கொள்ள இளைஞர்கள் மிகுந்த ஆர்வம் காட்டுவதாக குறிப்பிட்ட அவர்,  தடுப்பூசிகளுக்கு சிறிதளவு பற்றாக்குறை உள்ள போதிலும், மத்திய அரசு உதவும் என நம்புவதாக அவர் கூறினார். முழு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ள காலக்கட்டத்தில் மெட்ரோ ரயில்கள் இயங்காது என்றும் அரவிந்த் கெஜ்ரிவால் கூறியிருக்கிறார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com