கேரளாவில் அடுத்து வரும் வாரங்களிலும் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என மாநில அரசு அறிவித்துள்ளது.
இந்தியாவில் கொரோனாவால் அதிகம் பாதித்த மாநிலங்களில் கேரளாவும் உள்ளது. அங்கு பக்ரீத் பண்டிகையையொட்டி கடைகள் திறக்க அனுமதி அளிக்கப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனிடையே, கடந்த இரண்டு வாரங்களாக சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் தளர்வில்லா முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அந்த வகையில் வரும் வார இறுதி நாட்களிலும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என கேரள அரசு அறிவித்துள்ளது. மேலும் நாளைக்குள் 3 லட்சம் கொரோனா பரிசோதனைகள் செய்யவும் மாநில அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது.