13 தொகுதிகளில் நடைபெற்ற இடைத்தேர்தல்: 10 இடங்களைக் கைப்பற்றிய INDIA கூட்டணி.. முழு விவரம்!

நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள, 13 தொகுதிகளுக்கு நடந்த இடைத்தேர்தலில் 10 இடங்களைக் கைப்பற்றி INDIA கூட்டணி அபார வெற்றி பெற்றுள்ளது.. எந்தெந்த தொகுதிகள்,வெற்றி பெற்றது யார் என விரிவாகப் பார்ப்போம்..
13 தொகுதி இடைத்தேர்தல் முடிவுகள்
13 தொகுதி இடைத்தேர்தல் முடிவுகள்web
Published on

பீகார், ஹிமாச்சலப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், பஞ்சாப், தமிழ்நாடு, உத்தரகாண்ட், மேற்குவங்கம் ஆகிய ஏழு மாநிலங்களில் உள்ள 13 தொகுதிகளுக்கு சமீபத்தில் வாக்குப்பதிவு முடிந்த நிலையில், இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது..

13 தொகுதி இடைத்தேர்தல் முடிவுகள்
’மிகவும் வலிக்கிறது’ கேன்சரால் தவிக்கும் சகவீரருக்காக நிதி திரட்டும் கபில்தேவ்! BCCI உதவ கோரிக்கை!

பீகார் - பீகார் மாநிலத்தில், ரூபாலா தொகுதிக்கு தேர்தல் நடைபெற்றது. அதில், ஆளும் ஐக்கிய ஜனதாதளம் மற்றும் எதிர்க்கட்சியான ராஷ்டிரிய ஜனதா தளம் ஆகிய இரண்டுக்கும் வெற்றி கிடைக்கவில்லை... சுயேட்சையாக போட்டியிட்ட முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சங்கர் சிங் சுமார் 8,246 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். அடுத்ததாக, மலைவாசஸ்தலமான மாநிலமான இமாச்சலப் பிரதேசத்தில், தேரா, ஹமிர்பூர், நலகார்க், ஆகிய மூன்று தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற்றது. இதில் தேரா தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் மாநில முதல்வர் சுகுவிந்தர் சுகுவின் மனைவி கமலேஷ் தாக்கூர் களமிறங்கினார்...அவர், எதிர்த்துப் போட்டியிட்ட பாஜக வேட்பாளர் ஹோசியார் சிங்கைவிட,9,399 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றிருக்கிறார்..மற்றொரு தொகுதியான நலகர்க் தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் களமிறக்கப்பட்ட ஹர்தீப் சிங் பவா 34 ஆயிரத்திற்கும் அதிகமான வாக்குகளை பெற்று சுமார் 8890 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். அதே நேரத்தில் ஹமிர்பூர் தொகுதிக்கான இடைத்தேர்தலில் எதிர் கட்சியான பாஜக சார்பில் களம் இறக்கப்பட்ட ஆஷிஷ் சர்மா 1571 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்..

மத்தியப் பிரதேசம் - அடுத்ததாக, மத்தியப் பிரதேசத்தின் அமர்வாரா சட்டமன்றத் தொகுதியில் பாஜக மற்றும் காங்கிரஸ் வேட்பாளர்கள் இடையே கடும் போட்டி நிலவி வந்த நிலையில் பாஜக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார் கமலேஷ் பிரதாப் சாகா. ஆளும் கட்சியாக பாஜக இருந்த போதும் வெறும் 3,000 வாக்குகள் வித்தியாசத்தில் மட்டுமே அவர் வெற்றி பெற்றுள்ளார். நாடாளுமன்றத் தேர்தலில் ஆம் ஆத்மி மற்றும் காங்கிரஸ் கட்சி ஆகியவை கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்த நிலையில், பஞ்சாபின், மேற்கு ஜலந்தர் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் தனித்தனியாக தேர்தலைச் சந்தித்தனர். ஆம் ஆத்மி கட்சியை வேட்பாளர் மொகிந்தர் பகத், சுமார் 55 ஆயிரம் வாக்குகளை பெற்று 37 ஆயிரத்து 325 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். தமிழ்நாட்டில், திமுக சார்பில் போட்டியிட்ட, அன்னியூர் சிவா, பாமக வேட்பாளரைவிட, 67,757 வாக்குகள் அதிகம் பெற்று மாபெரும் வெற்றி பெற்றிருக்கிறார்.

13 தொகுதி இடைத்தேர்தல் முடிவுகள்
’இதுபோல சுயநலமான வீரரை பார்த்ததில்லை..’ ஜெய்ஸ்வாலின் சதத்தை தடுத்த கில்? விளாசும் ரசிகர்கள்!

உத்தரகாண்ட் - சுற்றுலாவை மையமாகக் கொண்ட மாநிலங்களில் ஒன்றான உத்தரகாண்ட் மாநிலத்திற்கு பத்ரிநாத் மற்றும் மங்களூர் ஆகிய இரண்டு தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற்றது. ஆளும் கட்சியான பாஜகவுக்கு அதிர்ச்சியளிக்கும் வகையில், இரண்டு தொகுதிகளிலும் எதிர்கட்சியான காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளது. இதில் பத்ரிநாத் தொகுதியை பொறுத்தவரை காங்கிரஸ் கட்சி சார்பாக லகாபத் சிங் புடோலா களமிறக்கப்பட்டிருந்த நிலையில் அவர் 28,161 வாக்குகளை பெற்று சுமார் 5224 வாக்குகள் வித்தியாசத்தில் பாரதிய ஜனதா கட்சியின் வேட்பாளரான ராஜேந்திர சிங் பந்தாரியை தோற்கடித்துள்ளார். பத்ரிநாத் தொகுதியை பொறுத்தவரை ஏராளமான இந்து புனித தலங்கள் இடம்பெற்றிருக்கக்கூடிய பகுதியாகும். இங்கு காங்கிரஸ், பாஜக என இரு கட்சிகளும் மாறி மாறி வெற்றி பெற்றிருக்கிறது. இந்த முறை பாரதிய ஜனதா கட்சி வெற்றியை அதிக அளவில் எதிர்பார்த்து இருந்த ஒரு தொகுதி. ஆனால் அங்கு பாஜகவால் வெற்றி பெற இயலவில்லை. அயோத்தியாவிற்கு பிறகு முக்கிய இந்து ஆலயங்கள் அமைந்துள்ள தொகுதியில் பாஜக தோல்வியைத் தழுவுகிறது என்பது குறிப்பிடத்தக்கது..

அதேபோல மற்றொரு தொகுதியான மங்களூர் தொகுதியில் பாஜக சார்பின் கர்த்தார் சிங் பந்தானா போட்டியிட்ட நிலையில், அவரை காங்கிரஸ் கட்சி சார்பில் களம் கண்ட கோசி முகமது நிஜாமுதீன் 422 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்துள்ளார். நாடாளுமன்றத் தேர்தலில் உத்தராகண்ட் மாநிலத்தில் பாஜக க்ளீன் ஸ்வீப் செய்த நிலையில் இடைத்தேர்தலில் அக்கட்சிக்கு கிடைத்த தோல்வி அரசியல் தளத்தில் முக்கியமானதாக பார்க்கப்படுகின்றது..அடுத்ததாக, மேற்குவங்க மாநிலத்தில் நான்கு தொகுதிகளுக்கு நடைபெற்ற இடைத்தேர்தலிலும் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி மிகப் பெரும் வெற்றியை பெற்றுள்ளது

13 தொகுதி இடைத்தேர்தல் முடிவுகள்
“விராட் கோலி பாகிஸ்தான் வந்தால் இந்தியா மீதான அன்பை மறந்துவிடுவார்..”! - ஷாகித் அப்ரிடி

ராய்கஞ்ச், ரானா காட் தக்ஷின் மற்றும் பாக்தா ஆகிய மூன்று சட்டமன்ற தொகுதிகளிலும் கடந்த 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் பாஜக வெற்றி பெற்றிருந்த நிலையில் மூவரும் திரிணாமூல் காங்கிரசுக்கு கட்சி தாவியதை அடுத்து இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. அதேபோல மணிக்தலா தொகுதியை பொறுத்தவரை திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் சதன் பாண்டே மரணம் அடைந்ததை அடுத்து அந்த தொகுதியும் காலியானதாக அறிவிக்கப்பட்டது.

மேற்குவங்க மாநிலத்தின் ராய்கஞ்ச், ராணா காட் தக்ஷின், பாக்தா மற்றும் மணிக்தலா ஆகிய நான்கு தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடைபெற்றது. இதில் ராய்கஞ்ச் தொகுதியில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் கிருஷ்ணா கல்யாணி சுமார் 50,000 வாக்குகள் வித்தியாசத்திலும் மணிக்தலா தொகுதியில் சுப்தி பாண்டே 51 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்திலும், ராணா காட் தக்ஷின் தொகுதியில் முக்த் மணி அதிகார் சுமார் 39 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்திலும் பாக்தா தொகுதியில் மதுப்பர்ணா தாகூர் சுமார் 33,000 வாக்குகள் வித்தியாசத்திலும் வெற்றி பெற்றுள்ளனர். இதில் அனைத்து தொகுதிகளிலும் பாரதிய ஜனதா கட்சி இரண்டாம் இடம் பிடித்துள்ளது. ஏற்கனவே மேற்குவங்க மாநில சட்டமன்றத்தில் 215 இடங்களை வைத்து மிக வலுவான நிலையில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி உள்ள நிலையில் தற்பொழுது இடைத்தேர்தலில் மேலும் 4 இடங்களில் கைப்பற்றி 219 இடங்களுடன் அசுர பலத்துடன் ஆட்சியை தொடர்கிறது..

ஆகமொத்தமாக, ஹிமாச்சலப் பிரதேச மாநிலத்தில் மூன்று தொகுதிகளில் இரண்டு தொகுதிகளில் காங்கிரஸ் கட்சியும் பஞ்சாப் மாநிலத்தில் மேற்கு ஜலந்தர் தொகுதியில் ஆம் ஆத்மி கட்சியும் தமிழ்நாட்டின் விக்கிரவாண்டி தொகுதியில் திமுகவும் உத்தராகண்டின் இரண்டு தொகுதிகளில் காங்கிரஸ் கட்சியும் மேற்கு வங்கத்தின் நான்கு தொகுதியில் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியும் வெற்றி பெற்றுள்ளன...மொத்தமாக, 13 தொகுதிகளில் INDIA கூட்டணி 10 தொகுதிகளிலும், பாஜக இரண்டு தொகுதியிலும் சுயேச்சை ஒருவரும் வெற்றி பெற்றிருக்கின்றனர்.

13 தொகுதி இடைத்தேர்தல் முடிவுகள்
"இந்த 2 இந்திய வீரர்களால் என்னுடைய 400 ரன்கள் சாதனையை முறியடிக்க முடியும்!" - பிரையன் லாரா

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com