உலக அளவில் 54 நாடுகளின் விலையுடன் ஒப்பிடுகையில் இந்தியாவில் எரிவாயு விலை மிக அதிகமாக இருப்பது தெரியவந்துள்ளது.
சர்வதேச நிதியம் நிர்ணயத்துள்ள டாலரின் சராசரி மதிப்புடன் ஒப்பிட்டு எரிவாயு, பெட்ரோல் மற்றும் டீசல் விலை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி 54 நாடுகளுடன் ஒப்பிடும்போது இந்தியாவில்தான் எரிவாயு விலை அதிகமாக இருக்கிறது. முன்னேறிய நாடுகளான பிரிட்டன், ஸ்பெயின், இத்தாலி உள்ளிட்ட நாடுகளை விட இந்தியாவில் எரிவாயு விலை அதிகமாக இருக்கிறது.
உதாரணமாக சர்வதேச நிதியம் நிர்ணயித்துள்ள டாலரின் உலக சராசரி மதிப்பு 22 ரூபாய் 6 காசுகளாக இருக்கும் நிலையில் இந்தியாவில் ஒரு லிட்டர் எரிவாயு விலை 77 ரூபாயாக உள்ளது. இதுவே ஸ்பெயின், ஜெர்மனி நாடுகளில் ஒரு லிட்டர் எரிவாயு விலை 31 ரூபாய் ஆகவும் பிரிட்டனில் 22 ரூபாயாகவும் உள்ளது. இதேபோல 154 நாடுகளின் பெட்ரோல் விலையுடன் ஒப்பிடும்போது இந்தியா 3வது இடத்தில் உள்ளது.
டீசல் விலை அதிகமாக இருக்கும் நாடுகளின் வரிசையில் இந்தியா 8வது இடத்தில் இருக்கிறது. சர்வதேச நிதியம் தினசரி உள்நாட்டு உற்பத்தியுடன் ஒப்பிட்டு பெட்ரோலுக்காக மக்கள் செலவிடும் தொகையை வகைபடுத்தி உள்ளது. அதன்படி இந்தியர்கள் தங்களது சராசரி வருவாயில் நான்கில் ஒரு பங்கை பெட்ரோல் வாங்குவதற்காக செலவிடுவது தெரியவந்துள்ளது.